மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 லீக் போட்டியில் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியை பொறுத்தவரை டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் குஜராத் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. குஜராத் அணியை பொறுத்த வரை தொடக்க வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 46 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. சூரியகுமார் யாதவைத் தவிர மற்ற யாரும் பொறுப்பை உணர்ந்து விளையாடவில்லை. இறுதியில் சூரியகுமார் யாதவ் 48 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரோடு பாட்னர்ஷிப் அமைத்தத்தில் திலக் வர்மா 39 ரன்கள் குவித்தார். இதில் ஹார்திக் பாண்டியா 11 ரன்னில் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த போட்டியை பொருத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக இருந்தோம் என்று நினைக்கிறேன். நாங்கள் களத்தில் தொழில் முறைக்குத் தகுந்தவாறு விளையாடவில்லை. அடிப்படை விஷயங்களில் சில தவறுகளை செய்தோம். இதனால் எங்களுக்கு 20 முதல் 25 ரன்கள் வரை அதிகமாக சென்றது. குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
இதையும் படிங்க:196 ரன்.. தமிழக வீரரின் அசத்தல் பேட்டிங்.. ரோஹித் பாண்டியா ஏமாற்றம்.. 36 ரன்னில் தோல்வி.. தொடரும் மும்பையின் சோகம்
அவர்கள் மிகவும் விதிவிலக்காக விளையாடினார்கள். எங்களுக்கு அவர்கள் பெரிய வாய்ப்புகளை கொடுக்கவில்லை. அடிப்படை விஷயங்களை சரியாக செய்து விளையாடினார்கள். பல ஆபத்தான ஷாட்கள் விளையாடாமல் அடிப்படை விஷயங்களை சரி செய்து ரன்கள் குவித்தனர். இந்த போட்டிக்கான தோல்வி எங்கள் அனைவரும் மீதும் இருக்கிறது. எனவே பேட்ஸ்மேன்கள் அனைவரும் திரும்பவும் பார்முக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் மெதுவான பந்துகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நான் முதலில் பந்து வீசியது போன்ற குஜராத் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக அதேபோன்று வீசினார்கள்” என்று பேசியிருக்கிறார்.