மும்பைக்கு கேப்டனான பிறகு ரோகித்கிட்ட பேசினிங்களா? – ஹர்திக் பாண்டியா தந்த பதில்

0
429
Rohit

ஐபிஎல் தொடர் வரலாற்றில் டிரேடிங் முறையில் வீரர்கள் வாங்கப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாங்கப்பட்டதுதான் பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்து, அந்த அணியில் இருந்து தன்னுடைய பழைய அணிக்கு அவர் திரும்பி இருப்பது குறித்து இப்பொழுது வரை விமர்சனங்கள் நிற்கவில்லை.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பில் 10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்த ரோகித் சர்மாவை, ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வருவதால், கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி இருப்பது இன்னும் விமர்சனங்களை கூடுதலாகி இருக்கிறது.

- Advertisement -

பெரும்பான்மையான மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஹர்திக் பாண்டியா இவ்வளவு சீக்கிரத்தில் கேப்டன் ஆக கொண்டு வந்தது பிடிக்கவில்லை. மேலும் இன்னும் ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் சந்தித்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ரோகித் சர்மா அனேகமாக மும்பை இந்தியன்ஸ் அணி உடன் இன்று இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா உடன் பேசினீர்களா?

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் வருவது அதிசயமான ஒரு உணர்வாக இருக்கிறது. தற்போது எனக்கு கிடைத்திருக்கும் எல்லாமே 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்துதான் ஆரம்பித்தது. நான் இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை. எனக்கு பிடித்தமான மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ரோகித் சர்மா தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அவரது அனுபவம் எனக்கு உதவி செய்யும். மேலும் அவரது தலைமையின் கீழ் இந்த அணி நிறைய சாதித்து இருக்கிறது. என்னுடைய முழு வாழ்க்கையில் அவரது தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன். அவர் எப்பொழுதும் எனக்கு ஆதரவாக என் தோள் மீது கை வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியும்.

- Advertisement -

நான் நிச்சயம் வந்து பேசுவேன். மேலும் நான் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். என்னால் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடிந்த விஷயங்களில் மட்டும்தான் என்னால் கவனம் செலுத்த முடியும்.

இதையும் படிங்க : சிஎஸ்கே-க்கு எதிரா இந்த பிளேயிங் லெவனோட போங்க.. ஆர்சிபி-க்கு பிளானை கொடுத்த ஆகாஷ் சோப்ரா

ரோகித் சர்மா தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வருகின்ற காரணத்தினால், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆன பிறகு அவருடன் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. எனவே அவர் அணியுடன் இணைந்ததும் நிச்சயம் நான் அவருடன் பேசுவேன்” எனக் கூறியிருக்கிறார்.