கேப்டனா முதல் போட்டியை ஜெயிச்சுட்டேன்.. என்ன நடந்தாலும் இதை செய்யக்கூடாதுனு முடிவுல இருந்தேன் – பும்ரா பேட்டி

0
29
Bumrah

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து அவர் பேசியுள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் எட்டு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கு இறுதிவரை களத்தில் நின்று திலக் வருமா அதிரடி அரைசதம் அடித்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

புதிய கேப்டன் பொறுப்பு

நேற்று முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பும்ரா கேப்டனாக பொறுப்பேற்றார். இதன் மூலம் ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பும்ரா சிறப்பான முறையில் கேப்டன்சி செய்திருந்தார்.

இதுகுறித்து அவர் பேசும் போது “முதல் போட்டியில் கேப்டனாக வெற்றி பெற்றிருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ஏற்கனவே இந்திய அணிக்கு டி20 மற்றும் டெஸ்ட் வடிவில் கேப்டனாக இருந்திருக்கிறேன். இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக இருக்கவில்லை. ஆனால் அது நடப்பதற்கான வாய்ப்பில்லை என்று எனக்கு தெரியும்”

- Advertisement -

இதைச் செய்யக் கூடாது

“இந்த போட்டியை பொறுத்தவரையில் பந்தை லென்த் குறைவாகவோ இல்லை ஃபுல்லாகவோ வீசினால் சிறிய மைதானத்தில் வெளியில் அடித்து விடுவார்கள் என்று தெரியும். எனவே நல்ல லென்த்தில் எல்லா பந்துகளையும் ஸ்டெம்பை நோக்கி வீச வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். நல்ல பந்துகளை முடிந்தால் அவர்கள் அடிக்கட்டும் என்று வீசினோம்”

இதையும் படிங்க : தொடர்ந்து 5 தோல்விகள் ஜீரணிக்க கஷ்டமா இருக்கு.. ஆனா திலக் வர்மாவை பாராட்டுறேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

“திலக் வர்மா இறுதி வரை நின்று மிகவும் அற்புதமாக விளையாடினார். அதே சமயத்தில் பந்து வீச்சில் இவருக்கு இணையான பங்களிப்பை சர்துல் தாக்கூர் கொடுத்திருக்கிறார். மேலும் சிறிய பங்களிப்பாக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு தேவையானதை வில் ஜேக்ஸ் கொடுத்தார். எனவே இவர்கள் இருவர் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -