தொடர்ந்து 5 தோல்விகள் ஜீரணிக்க கஷ்டமா இருக்கு.. ஆனா திலக் வர்மாவை பாராட்டுறேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

0
20
Shreyas

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கு திலக் வர்மா சிறப்பாக விளையாட, அந்த அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஜீரணிக்க கடினமானது

முதல் ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்று இருந்த பஞ்சாப் கிங்ஸ் அதற்கடுத்த ஐந்து போட்டிகளையும் தொடர்ந்து தோற்று இருக்கிறது. மேலும் அடுத்து ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் போது “இந்த போட்டியில் தோல்வி ஜீரணித்துக் கொள்ள மிகவும் கடினமானது. ஆனால் இந்த போட்டியில் எந்த ஒரு தருணத்தையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் இது மிகவும் சிறப்பான போட்டியாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக போராடின. திலக் வர்மா அருமையாக விளையாடினார். அவர் பீல்ட் செட்அப்பை பார்த்து அற்புதமாக விளையாடினார். அவரை நாம் பாராட்ட வேண்டும்”

- Advertisement -

ஆர்சிபி-காக காத்திருக்கிறோம்

“ஒரு கட்டத்தில் நாங்கள் 170 முதல் 180 ரன் மட்டுமே எடுப்போம் என்கின்ற சூழ்நிலை இருந்தது. இந்த நிலையில் அஸ்மத் உள்ளே வந்து மிகவும் அற்புதமான ஸ்கூப் சிக்ஸர்கள் அடித்தார். அவர் மொத்தமாக ஆட்டத்தின் வேகத்தை மாற்றிவிட்டார். இதனால்தான் எங்கள் 200 ரன்கள் எடுக்க முடிந்தது. இதற்கு அவரை பாராட்ட வேண்டும்”

இதையும் படிங்க : கேப்டனை மாற்ற போகும் 4 ஐபிஎல் அணிகள்.. இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என முடிவு – வெளியான புதிய தகவல்கள்

“அடுத்து ஆர்சிபி அணிக்கு எதிராக பகல் போட்டியில் விளையாடுவதற்கு நாங்கள் உற்சாகமாக காத்திருக்கிறோம். அடுத்த இரண்டு போட்டிகளையும் நாங்கள் வெல்ல வேண்டும் என்பது தெரியும். எனவே இது மிகவும் அருமையான போட்டிகளாக அமையப்போகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -