பும்ராவை விட பெஸ்ட்டா வருவேன்.. சவால் விட்ட 17 வயது பையனை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

0
492
Bumrah

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி துவங்க இருக்கும் 17 வது ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றே ஆக வேண்டும் என்கின்ற அதிதீவிரத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

இதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையை வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியாவையே டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் பேசி அழைத்து வந்தது. அவர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் பேட்டிங்கில் பினிஷர் என்பதால், பல வகையில் மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனில் அது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதைக்கு மூன்று வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே பிளேயிங் லெவனில் வாய்ப்பு தர முடியும் என்கின்ற அளவில் சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு முறை கோப்பையை வென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறை கோப்பையை வென்று முன்னணியில் இருக்க விரும்பும் அணி, எனவே அவர்கள் இந்த முறை கோப்பையை எப்படியும் கைப்பற்றிய ஆக வேண்டும் என்கின்ற பசியில் இருக்கிறார்கள் என்று பேசி இருந்தார்.

மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெரால்டு கோட்ஸி (ரூ. 5 கோடி), தில்ஷன் மதுஷங்கா (ரூ. 4.60 கோடி), ஷ்ரேயாஸ் கோபால் (ரூ. 20 லட்சம்), நுவான் துஷாரா (ரூ. 4.80 கோடி), நமன் திர் (ரூ. 20 லட்சம்), அன்ஷுல் காம்போஜ் (ரூ. 20 லட்சம்), முகமது நபி (ரூ. 1.5 கோடி) மற்றும் ஷிவாலிக் சர்மா (ரூ. 20 லட்சம்) ஆகியோரை வாங்கி இருந்தது.

ஜெரால்ட் கோட்ஸி, நுவான் துஷாரா மற்றும் தில்சன் மதுஷங்கா என சிறந்த வேகபந்துவீச்சாளர்களை வாங்கி இருந்த காரணத்தினால், ஏற்கனவே இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து, அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் மிகச் சிறப்பாக மாறியது.

- Advertisement -

பும்ராவை விட பெஸ்ட்டா வருவேன்

இந்த நிலையில்தான் இலங்கையைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தில்சன் மதுஷங்கா பங்களாதேஷ் தொடரில் காயமடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஏற்கனவே இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவின் பெஹரான்டாப் காயத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி இருந்தார்.இதன் காரணமாக அவர்களுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இல்லாத நிலை உருவானது.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலால் எங்க டீம் ஊழியர்கள் காயமடைகிறார்கள்.. என்ன பண்றதுனு தெரியல – சஞ்சு சாம்சன் பேச்சு

இந்த நிலையில் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடிய 17 வயது இடதுகை வேகப்பந்துவீச்சாளர் க்வேனா மபாகாவை மும்பை இந்தியன்ஸ் அதிரடியாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. அண்டர் 19 உலகக் கோப்பையில் இவரது பந்துவீச்சு பலரையும் கவர்ந்திருந்தது. மேலும் பும்ராவை விட சிறப்பாக வருவேன் என்று இந்த இளைஞர் சவால் விட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பும்ரா இருக்கும் அணியிலேயே தற்போது இவருக்கு இடமும் கிடைத்திருப்பது சுவாரசியமாக அமைந்திருக்கிறது.