WPL ஏலம்.. கோடியை அள்ளிய 16 வயது தமிழக வீராங்கனை.. 2வது பெரிய விலை.. யார் இந்த கமலினி?

0
686

இன்று பெண்களுக்கான இந்திய டி20 தொடர் டபிள்யுபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான ஜி.கமலினி 1.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக இந்திய கிரிக்கெட் வாரியம் பெண்களுக்கும் ஐபிஎல் தொடர்போல டபுள்யுபிஎல் டி20 தொடரை நடத்தி வருகிறது. முதல் வருடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாவது வருடம் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சிஎஸ்கே இதில் அணியை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டெல்லி மும்பை இடையே நடந்த ஏலப் போராட்டம்

இன்று நடைபெற்ற டபிள்யூபிஎல் மினி ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே தமிழகத்தின் 16 வயதான ஜி.கமலினியை வாங்குவதற்கு கடும் போட்டி நடந்தது. அடிப்படை விலையாக 10 லட்ச ரூபாய்க்கு வந்த அவர் படிப்படியாக ஒரு கோடி ரூபாயை தாண்டினார்.

இந்த நிலையில் இரு அணிகளும் விட்டுத் தராமல் மீண்டும் ஏலத்தில் தொடர்ந்து அவரை வாங்குவதற்கு போராட்டத்தை நடத்தினர். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 1.60 கோடி ரூபாய்க்கு தமிழகத்தின் ஜி.கமலினியை ஏலத்தில் வாங்கியது. இந்த ஏலத்தில் இது இரண்டாவது பெரிய தொகையாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டிடேந்திரா டோட்டினை 1.70 குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியது இந்த எழுத்தில் அதிகபட்ச விலையாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

யார் இந்த ஜி.கமலினி?

பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான ஜி. கமலினி இடது கையில் பேட்டிங் செய்பவர். மேலும் பகுதி நேரமாக சுழல் பந்துவீச்சு வீசக்கூடியவர். இது மட்டும் இல்லாமல் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடியவர். மேலும் இவரிடம் மிகச் சிறப்பாக பவர் ஹிட்டிங் திறமை இருக்கிறது. இதன் காரணமாகவே இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் இவரது பெயர் அடிக்கடி பேசப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு அக்டோபர் இந்திய உள்நாட்டில் அண்டர் 19 அணிகளுக்கு நடைபெற்ற டி20 தொடரில் ஜி.கமலினி மொத்தமாக 8 போட்டிகளில் 311 ரன்கள் குவித்து தொடரில் அதிக ரன் அடித்த இரண்டாவது வீராங்கனையாக வந்தார். மேலும் இந்த டி20 தொடரை தமிழக அணி கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். இதில் பத்து சிக்ஸர்களை அடித்தும் இருந்தார்.

 இதையும் படிங்க : ஹெட்டுக்கு ப்ளான் கொடுத்தேன்.. ஆனா இவங்க செய்யல.. நைட் இல்ல நாளைக்கு அதை செய்வோம் – மோர்னே மோர்கல் பேட்டி

மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் இறுதிப் போட்டியில் அதிரடியாக 79 ரன்கள் எடுத்தார். இந்த செயல்பாடு அண்டர் 19 ஆசிரியர் கோப்பை இந்திய அணியில் இவருக்கு இடம் பிடித்துக் கொடுத்தது. இதிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். பேட்டிங், பவுலிங், விக்கெட் கீப்பிங் மற்றும் பவர் ஹிட்டிங் என பன்முகத்திறமையால் இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் எதிர்கால வீராங்கனை ஆக பார்க்கப்படுகிறார். இதன் காரணமாகவே மும்பை இந்தியன்ஸ் இவருக்கு 1.60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.

- Advertisement -