ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக தங்களிடம் திட்டங்கள் இருப்பதாகவும், ஆனால் அதைப் பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படுத்தவில்லை என இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறியிருக்கிறார்.
இன்று இந்திய அணி பந்துவீச்சாளர்கள் மிக சுமாராக செயல்பட்டிருந்தார்கள். பும்ரா மட்டுமே தனி ஒரு வீரராக போராடி ஆஸ்திரேலியா அணியை ஒரு கட்டுக்குள் வைப்பதற்கு முயற்சி செய்தார். மீண்டும் ஹெட் இந்திய அணிக்கு எதிராக இன்று ஒரு பெரிய சதத்தை பதிவு செய்து ஆட்டம் இழந்தார்.
50 முதல் 80 ஓவர்கள் பந்துவீச்சு
இந்த நிலையில் பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஹெட்டுக்கு எதிராக திட்டங்கள் இருந்ததா? இந்திய பந்துவீச்சாளர்கள் என்ன தவறு செய்தார்கள்? எந்த இடங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இதுகுறித்து மோர்னே மோர்கல் பேசும்பொழுது “நாங்கள் 50 முதல் 80 ஓவர்கள் வரையிலான பந்துவீச்சில் சிறப்பாக இருக்க வேண்டும். நாங்கள் முதல் செஷனில் சிறப்பாக பந்து வீசி இருந்தோம். வந்து தேய்ந்ததற்கு பிறகு அவர்கள் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள். எங்களிடம் விளையாட்டு திட்டங்கள் இருக்கின்றது. அதை நாங்கள் சரியாக செயல்படுத்துகிறோமா? என்பதுதான் முக்கியமான கேள்வி”
ஹெட்டுக்கு திட்டம் இதுதான்
“ஹெட்க்கு எதிராக ஓவர் த விக்கெட்டில் இருந்து ஸ்டெம்ப் லைனில் பந்து வீச வேண்டும் என்பது எங்களுடைய திட்டமாக இருந்தது. மேலும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட பலத்துக்கு திரும்ப வேண்டும்.ஹெட் உள்ளே வந்தவுடன் நாம் தவறு செய்வதற்கான மார்ஜின் குறைகிறது. எனவேவிஷயங்கள் கடினமாக மாறுகிறது. நாங்கள் 50 ஓவர் தாண்டிய பிறகு சிறப்பாக இருக்க வேண்டியது முக்கியம்”
இதையும் படிங்க : பும்ராவுக்கு எதிரா என்னோட திட்டம் இதுதான்.. இந்த மந்திரத்தை தான் பாலோ பண்ணினேன் – டிராவிஸ் ஹெட் பேட்டி
“ஹெட் தொடர்ந்து அதிரடியாக ரன்கள் எடுத்தாலும் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தில் அப்படியே தொடர வேண்டுமா? அல்லது நாங்கள் அங்கிருந்து உடனடியாக வேறு திட்டத்துக்கு செல்ல வேண்டுமா? என்பதுநாம் கவனிக்க வேண்டிய முக்கிய ஒன்றாக இருக்கிறது. அது குறித்து இன்று இரவு அல்லது இரண்டு நாட்களில் நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.