ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? சச்சின் மகனுக்கு இடம் கிடைக்குமா?

0
438

ஐபிஎல் தொடர் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 16வது சீசனில் பெரிய சாதனை படைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பை அணி தொடர்ந்து இரண்டு தொடர்களில் மோசமாக விளையாடுகிறது. கடைசியாக விளையாடிய இரண்டு சீசன்களிலும் மும்பை அணி பிளே ஆப் கூட தகுதி பெற முடியவில்லை.

- Advertisement -

கடந்த சீசனில் பத்தாவது இடத்தை பிடித்து மோசமான தோல்வியை தழுவியது. விளையாடிய 14 போட்டிகளில் 10 போட்டிகளில் மும்பை அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் நடப்பு சீசனில் மும்பை அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை  தற்போது பார்க்கலாம். மும்பை அணியில் இம்முறை பும்ரா இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. பும்ராவுக்கு பதில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் அனுபவம் வாய்ந்தவர்களாக இல்லை.

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும் பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார். ஆனால் ஐபிஎல் தரத்திற்கு அவரால் செயல்பட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த முறை அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் மும்பை அணி முற்றிலும் வெளிநாட்டு வேக பந்துவீச்சாளர்கள் நம்பியே களம் இறங்குகிறது.

ஜோப்ரா ஆர்ச்சர், ஜேசன் பெகுரண்டாப், கேமிரான் கிரீன் ஆகிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் நான்காவது வெளிநாட்டு வீரராக டிம் டேவிட் இடம்பெற வாய்ப்பு உள்ளது. மற்ற வீரர்களாக அதே அணியே களமிறங்க வாய்ப்பு உள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா,இஷான் கிஷன், தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் மூன்றாம் இடத்தில் அதிரடி இளம் வீரர் திலக் வர்மா, நான்காவது வீரராக சூரியகுமார் யாதவும் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

ஐந்தாவது மற்றும் ஆறாவது வீரராக டிம் டேவிட் மற்றும் கேமரான் கிரீன் களமிறங்க கூடும். ஏழாவது வீரராக ராமன்தீப் சிங் ,8வது மற்றும் ஒன்பதாவது வீரர்களாக இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாடலாம். அது ஹிரித்திக் சோக்கீன், குமார் கார்த்திகேயா அல்லது பியூஷ் சாவ்லா என இந்த மூன்று வீரர்களில் இருவர் விளையாடலாம்.   முன்பே சொன்னது போல் இரண்டு வேகப்பந்து  வீச்சாளராக  ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேசன் பெகுரண்டாப் விளையாடலாம்.

மும்பை அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் அவர்கள் இந்திய ஆடுதளங்களில் எப்படி விளையாடுவார்கள் என்ற ஐயம் இருக்கிறது. இதேபோன்று இந்திய அணி வீரப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாதது மும்பை அணிக்கு பின்னடைவாக இருக்கிறது.

- Advertisement -