6, 4, 4, 6.. 18வது ஓவரில் கியரை மாற்றிய கிளாசன்.. முதல் பந்தில் ஸ்டம்பை காலி செய்து பும்ரா படைத்த ஸ்பெஷல் சாதனை.. ஐபிஎல் 2025

0
259

18 வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் திருவிழாவின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் சன்ரைசர்ஸ் அணியின் வீரர் கிளாஸனை போல்டாக்கி பும்ரா ஸ்பெஷல் சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

கிளாசனை வெளியேற்றிய பும்ரா

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசை இழந்த சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சு ஆதிக்கம் சிறப்பாக இருந்த நிலையில் அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை மும்பை வீரர்கள் வீணாக்க, அதற்குப் பிறகு அபிஷேக் ஷர்மா 40 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹர்திக் பாண்டியா அவரை வீழ்த்தினார்.

அந்தத் தொடக்கமே மும்பை அணி எழுச்சி பெற முக்கிய காரணமாக அமைந்தது. அதற்குப் பிறகு மற்றொரு தொடக்க வீரர் ஹெட் 29 பந்துகளில் 28 ரன்கள் குவித்து வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இசான் கிஷான் இரண்டு ரன், நித்திஷ் ரெட்டி 19 ரன் எடுத்து வெளியேற அணிக்கேத் வர்மாவை வைத்துக்கொண்டு கிளாசன் தனது கியரை மாற்றி தீபக்சகாரின் 18 வது ஓவரில் தனது அதிரடியை தொடர்ந்தார். ஒரே ஓவரில் 21 ரன்கள் குவித்த நிலையில் 19ஆவது ஓவரின் முதல் பந்தை பும்ரா வீச, அதனை எதிர்கொண்ட கிளாசின் முதல் பந்திலையே துல்லியமான யார்க்கரால் போல்ட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

பும்ரா படைத்த ஸ்பெசல் சாதனை

அந்த ஓவரில் வெறும் 4 ரன் மட்டுமே கொடுத்த பும்ரா சன்ரைசர்ஸ் அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். மொத்தமாக நான்கு ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு முக்கிய விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் ஸ்பெஷல் சாதனை ஒன்றைப் படைத்தார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் 39 முறை போல்ட் முறையில் பேட்ஸ்மேன்களை ஆட்டம் இழக்க செய்து அதிக முறை போல்ட் ஆக்கியவர்களின் பட்டியலில் பும்ரா 5வது இடத்தில் இணைந்தார்.

இதையும் படிங்க:சிஎஸ்கே பாணியில் அபிஷேக் சர்மாவை வீழ்த்த பிளான்.. திட்டம் சொதப்ப.. கேப்டனே களத்தில் இறங்கி செய்த சம்பவம்

இதில் மும்பை இந்தியன்ஸ் வீரர் லசித் மலிங்கா 63 முறை, பியூஸ் சாவ்லா 52 முறை, சுனில் நரேன் 50 முறை, ரவீந்திர ஜடேஜா 40 முறை இருக்கும் நிலையில் பும்ரா 39 முறை போல்ட் ஆக்கி ஐந்தாவது இடத்தில் இணைந்திருக்கிறார். அவரோடு புவனேஸ்வர் குமார் 39 முறையும், ரஷித் கான் 38 முறை வீழ்த்தி 6வது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -