இந்திய கிரிக்கெட்

13 வருட வினோத துயரம் முடிந்தது.. நொறுக்கி தள்ளிய ரோகித் சர்மா ரிக்கல்டன்.. மும்பை இந்தியன்ஸ் நிம்மதி வெற்றி.. கேகேஆர் தோல்வி

இன்று கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஹர்திக் பாண்டியா தங்கள் அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். கேகேஆர் அணியில் கேப்டன் ரகானே துவக்க ஆட்டக்காரராக இந்த முறை வந்தார். சுனில் நரைனை மேலே அனுப்பவில்லை.

ரகானே அபாரம்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டன் ரகானே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் ரகுவன்சி அரைசதம் அடித்து 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

இவர்களுக்கு அடுத்து பின் ஆலன் 17 பந்தில் 37 ரன், ரிங்கு சிங் 21 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் சர்துல் தாக்கூர் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் சாதனை வெற்றி

இதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 23 பந்தில் அரைசதம் அடித்து 38 பந்தில் 6 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் குவித்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் 24 பந்தில் அரைசதம் அடித்து 43 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்தார். மும்பை இந்தியன்ஸ் 19 புள்ளி ஒன்று ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : 19 வருட ஐபிஎல் வரலாறு.. ரோகித் சர்மா படைத்த சரித்திர சாதனை.. மீண்டும் மேஜிக் நடக்குமா?.. அதிரடி பேட்டிங்

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் தொடரில் தங்களது முதல் போட்டியில் இறுதியாக 2012 ஆம் ஆண்டு வெற்றி பெற்று இருந்தது. அதற்குப் பிறகு 13 ஆண்டுகளாக தங்களது முதல் போட்டியில் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் தோல்வி அடைந்து வந்தது. இந்த நிலையில் இந்த வினோத சோகத்திற்கு இந்த முறை முடிவு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts