19 வருட ஐபிஎல் வரலாறு.. ரோகித் சர்மா படைத்த சரித்திர சாதனை.. மீண்டும் மேஜிக் நடக்குமா?.. அதிரடி பேட்டிங்

0
5
Rohit

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் தனது 19 வருட ஐபிஎல் வரலாற்றில் ரோகித் சர்மா புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. யாரும் எதிர்பாராத விதமாக சூரியகுமார் யாதவ் இம்பாக்ட் பிளேயராக வெளியில அமர வைக்கப்பட்டார்.

- Advertisement -

கேகேஆர் ரன் குவிப்பு

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த கேகேஆர் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன் 17 பந்தில் 37 ரன், கேப்டன் ரகானே, 40 பந்தில் 67 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இதற்கு அடுத்து இளம் வீரர் ரகுவன்சி 29 பந்துகளில் 51 ரன்கள், ரிங்கு சிங் ஆட்டம் இழக்காமல் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்கள். வேட்டை ஆரணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ரோகித் சர்மா சாதனை

இதைத்தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ரியான் ரிக்கெல்ட்டன் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் பவர் பிளேவில் விக்கெட் இழக்காமல் 80 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியா செய்த மெகா சொதப்பல்.. வச்சு செய்த ரகானே.. பரிதாபமாக நின்ற ரோகித் – என்ன நடந்தது?

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 23 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். அவருடைய 19 வருட ஐபிஎல் வரலாற்றில் இது அவருடைய அதிவேக ஐபிஎல் அரைசதமாக பதிவாகியது. இதற்கு முன்பு அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -