228 ரன்.. பாண்டியாவுக்கு பயம் காட்டிய தமிழக வீரர்கள்.. 18வது முறை பெருமையை காப்பாற்றிய மும்பை.. குஜராத் தோல்வி

0
837
MI

இன்று ஐபிஎல் தொடரில் எலுமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் தோல்வியடையும் அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறும். இந்த நிலையில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

ரோகித் சர்மா – பேர்ஸ்டோ அபாரம்

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்கள். முதல் போட்டியில் விளையாடும் ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 47 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து 50 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 81 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் 20 பந்தில் 33 ரன்கள், திலக் வர்மா 11 பந்தில் 25 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்டியா 9 பந்தில் ஆட்டம் இழக்காமல் 22 ரன்கள் என அதிரடியாக எடுத்தார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தமிழக வீரர்களின் போராட்டம் வீண்

இதைத்தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிந்து கேப்டன் கில் 2 பந்தில் 1 ரன் மற்றும் மூன்றாவது இடத்தில் வந்த குசால் மெண்டிஸ் 10 பந்தில் 20 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். அதே சமயத்தில் இதை தொடர்ந்து ஜோடி சேர்ந்த தமிழகத்தின் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அதிரடியில் மிரட்டி மும்பைக்கு பயத்தை ஏற்படுத்தினார்கள்.

சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 80 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 24 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 48 ரன் கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி பிரிந்ததும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கனவும் கலைந்தது.

இதையும் படிங்க : 18 வருட வரலாறு.. பிளே ஆப்சில் கதகளி ஆடிய ரோஹித் சர்மா.. மாஸான 2 ரெக்கார்டு.. மும்பை புது சரித்திரம்

கடைசி இரண்டு ஓவர்களுக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியாக ஆறு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றில் நாளை மறுநாள் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. மேலும் 18 வது முறையாக 200 ரன்கள் எடுத்து தோல்வி அடையாமல் மும்பை பெருமையை காப்பாற்றி இருக்கிறது.

- Advertisement -