அர்ஜுன் டெண்டுல்கரை டிரேடிங் செய்யப் போகும் மும்பை.. எந்த அணிக்கு தெரியுமா? ரசிகர்கள் மகிழ்ச்சி – வெளியான செய்திகள்

0
106
Arjun

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை டிரேடிங் செய்ய முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியில் வந்து கொண்டிருக்கிறது.

அடுத்த மாதம் 2026 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் வெளியில் விடும் வீரர்களை அறிவித்தாக வேண்டும். அதற்கு முன்பாக இரு அணிகளுக்குள் சுமுகமாக வீரர்களை பரிமாறிக் கொள்ளும் டிரேடிங்கையும் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அர்ஜுன் டெண்டுல்கருக்கு அழுத்தம்

மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக அர்ஜுன் டெண்டுல்கரை ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கி வருகிறது. அதே சமயத்தில் இத்தனை ஆண்டுகளில் அவருக்கு தேவையான வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி கொடுக்கவில்லை. ஏனென்றால் அந்த அணியில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கருக்கு தன்னை நிரூபிக்க பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவரைச் சுற்றிலும் நிறைய அழுத்தங்கள் உருவாகி இருந்தது. மும்பை இந்தியன்ஸ் ஆச்சரியப்படும் விதமாக அவரை இன்னொரு அணிக்கு டிரேடிங் செய்கிறது என்கின்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

எந்த அணிக்கு செல்கிறார்?

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு ட்ரேடிங் செய்ய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் அந்த அணியில் இருந்து வேகபந்து வீச்சு ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூரை வாங்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் மும்பை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிஎஸ்கே தனது பிராண்டை தொலைத்து நம்பிக்கை அற்றதாக மாறிவிட்டது.. என்னால நம்ப முடியல – அஸ்வின் வருத்தம்

மும்பை இந்தியன்ஸ்க்கு சிறந்த அணி அமைந்தாலும் கூட தொடர்ந்து ஐந்து வருடங்களாக கோப்பையை கைப்பற்றாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக மேலும் சிறந்த அணியை உருவாக்க முடிவு செய்திருக்கிறது. கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் தான் அர்ஜுன் டெண்டுல்கரை விட்டுத்தர சமாதித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -