2018ல் சிஎஸ்கே என்ன செய்ததோ அதைத்தான் இப்பொழுது மும்பை இந்தியன்ஸ் செய்து கொண்டிருக்கிறது – சைமன் டால்!

0
4294
CSK

நடப்பு ஐபிஎல் 16ஆவது சீசன் தற்பொழுது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இனி நடக்க இருக்கும் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிகளின் தலையெழுத்தை மாற்றி எழுதுவதாக இருக்கும்!

எந்த ஐபிஎல் சீசனிலும் இல்லாத அளவிற்கு புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது. இன்னொரு புறத்தில் பந்துவீச்சில் பெரிய பலம் இல்லாத பொழுதும் மும்பை இந்தியன்ஸ் அணி 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இது ஒருபுறம் என்றால் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 11 ஆட்டங்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது ரன் சராசரி 17, ஸ்ட்ரைக் ரேட் 124 மட்டும்தான். அவரது மோசமான ஐபிஎல் பார்ம் மூன்றாவது ஆண்டாகத் தொடர்கிறது.

நேற்று வான்கடேவில் மிக முக்கியமான போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக ஒற்றை இலக்க ரன்னில் வழக்கம்போல் வெளியேறி ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை உடைத்தார்.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் எப்படி பார்க்கிறது? என்றும், அவருக்கு மேலும் தொடர்ந்து வாய்ப்புகள் தரலாமா? என்றும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சைமன் டால் தனது கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சைமன் டால் பேசும்பொழுது “ஒரு வீரர் தொடர்ச்சியாக ரன்கள் எடுக்காத பொழுதும், அந்த அணி தொடர்ந்து வெற்றிப் பாதையில் இருந்தால், அந்த அணி நிர்வாகம் அந்த வீரரை தொடர்ந்து நம்பலாம். இதைத்தான் சிஎஸ்கே அணி நிர்வாகம் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஷேன் வாட்சனுக்கு செய்தது. அவர் இறுதிப் போட்டியில் அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றினார்.

பவர் பிளேவில் இஷான் விளையாடிய விதம் மிகவும் பிடித்திருந்தது. அதேபோல் ரோகித்துக்கு வேலை செய்யவில்லை. இப்போது திலக் வர்மா பிட்டாக இருந்தால் என்ன நடக்கும்? இதற்காக நெகில் வதேராவை டிராப் செய்ய முடியாது!

இது சூரியக்குமாருக்கு இரண்டு பாதிகளின் சீசன் ஆகும். அவர் விளையாடிய கடைசி நான்கு கேம்கள் நம்ப முடியாத அற்புதமானவை. அவர் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்படும் மெதுவான பந்துகளுக்காக காத்திருந்ததும், அதை அழகான டைமிங்கில் பாயிண்ட் திசையில் அடித்ததும், அவரிடம் விளையாடுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்று காட்டியது!” என்று கூறியிருக்கிறார்!