சீட்டின் நுனிக்கு இழுத்து வந்த பரபரப்பான போட்டியில் டெல்லியை வீழ்த்தியது மும்பை!

0
516
MI

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக கொல்கத்தா வீரர் சர்துல் தாக்கூர் பற்ற வைத்த நெருப்பு இன்று டெல்லியில் மும்பை டெல்லி அணிகள் மோதிய போட்டி வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு கேப்டன் வார்னர் 47 பந்துகளில் 51 ரன்கள் என மெதுவான அரை சதத்தை கொண்டு வந்தார். ஆனால் இன்னொரு பக்கத்தில் இந்திய சுழற் பந்து வீச்சு ஆல்றவுண்டர் அக்சர் படேல் 25 பந்துகளில் 54 ரன்கள் எடுக்க டெல்லி அணி நிர்ணயித்த 20 ஓவர் முடிவில் 172 ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. மும்பை அணி தரப்பில் மூன்று ஓவர்கள் பந்து வீசி பெகரன்டாப் 23 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணிக்கு துவக்க ஜோடி கேப்டன் ரோஹித் சர்மா இஷான் கிஷான் இருவரும் முதல் விக்கட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். இஷான் கிஷான் 31 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

இதற்கு அடுத்து கேப்டன் ரோகித் சர்மா உடன் இளம் வீரர் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகப் பொறுப்பாக விளையாடி 68 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை அருகில் கொண்டு வந்தது. திலக் வர்மா 29 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் ரோகித் சர்மா 45 பந்தில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 24 ஐ பி எல் இன்னிங்ஸ்களுக்கு அடுத்து ரோகித் சர்மா அடிக்கும் அரை சதம் இதுவாகும். ஆட்டம் மெல்ல சூடு பிடித்து இரண்டு ஓவர்களுக்கு 20 ரன்கள் என்று வந்து நின்றது.

- Advertisement -

19ஆவது ஓவரை முஸ்தாபிஷூர் ரகுமான் வீச அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர் உட்பட 15 ரன்கள் வந்தது. இறுதி ஓவருக்கு ஐந்து ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களத்தில் டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இருந்தார்கள்.

கடைசி ஓவரை நோர்கியா வீசினார். இந்த ஓவரில் கிரீன் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் டேவிட் தவற விட்டு மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அதற்கு அடுத்து ஒரு பந்தை தவிர விட, இரண்டு பந்துகளுக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுக்க கடைசி பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை நேராகத் தட்டி விட்டு இரண்டு ஓடி எடுத்து மயிரிழையில் ரன் அவுட்டில் இருந்து தப்ப, மும்பை அணி மூன்றவது ஆட்டத்தில் முதல் வெற்றியை பெற்றது. டெல்லி அணியின் நான்காவது ஆட்டத்தில் நான்காவது தோல்வியை அடைந்தது.