தற்போது நடைபெற்று வரும் இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரில் சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த வாரம் முதல் கொண்டு துவங்கிய நடைபெற்று வரும் இந்த தொடரில் மும்பை அணிக்கு ஆரம்பத்தில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்து வழி நடத்தி வரும் நிலையில் இந்தப் போட்டியில் சூரியகுமார் யாதவ் முதல் முறையாக பங்கேற்றார்.
சூரியகுமார் – ஷிவம் துபே ஜோடி கலக்கல்
இந்த போட்டியில் டாஸ் வென்ற சர்வீசஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்திவி ஷா ரன் ஏதும் எடுக்காமலும், ரகானே 18 பந்தில் 22 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் 14 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே ஜோடி அதிரடியில் ஈடுபட்டது. சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை வெறும் 66 பந்தில் 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சூரியகுமார் யாதவ் 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 70 ரன்கள், ஷிவம் துபே 36 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 71 ரன்கள் எடுத்தார்கள். மும்பை அணி 20 ஓவர்களில் இவர்களது அதிரடியால் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது.
திரும்பி வந்த சர்துல் தாகூர்
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சர்வீசஸ் அணிக்கு மோகித் அகல்வாத் 40 பந்துகளில் 54 ரன்கள், விகாஸ் ஹத்வாலா 24 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : எங்கள பரவால்ல.. ஆஸியை ஜெய்ஸ்வால் செஞ்சுட்டார்.. அதுவும் அந்த சம்பவம் வேற லெவல் – குக் பாராட்டு
மும்பை அணியின் கடந்த போட்டியில் நான்கு ஓவரில் 60-க்கும் மேற்பட்ட ஆண்கள் கொடுத்த சர்துல் தாகூர் 4 ஓவர்களுக்கு 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். சாம்ஸ் முலானி மூன்று விக்கெட் வீழ்த்தினார்.