இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் செயல்பட்ட விதம் தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி விட்டதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் பாராட்டி பேசி இருக்கிறார்.
இளம் வீர ஜெய்ஸ்வாலுக்கு இதுவே முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக அமைந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்திருந்த போதும் கூட, இரண்டாவது இன்னிங்ஸில் 297 பந்துகளில் 161 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்தினார். இதில் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டார்க் உடன் பேச்சுவார்த்தையும் சூடாக களத்தில் சென்றது.
அச்சமற்ற மற்றும் குழப்பத்தில் ஆழ்த்தும் முறை
ஜெய்ஸ்வால் அச்சமற்ற முறையில் அதிரடியாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அது அவருக்கு இந்தியா மட்டும் அல்லாமல் தற்போது ஆஸ்திரேலியா வரையிலும் வெற்றி கொடுப்பதாக இருந்திருக்கிறது. எனவே இந்த அணுகுமுறையை அவர் நிறுத்திக் கொள்ள மாட்டார் என்று நம்பலாம்.
அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் எப்பொழுது அதிரடியாக விளையாடுகிறார்? எப்பொழுது தற்காப்பாக விளையாடுகிறார்? என்பது குறித்து எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு எந்த துப்பும் இருப்பது கிடையாது. ஏனென்றால் ஜெய்ஸ்வால் திடீரென தாக்கி விளையாடிவிட்டு உடனே மீண்டும் தற்காப்பு ஆட்டத்துக்கு சென்று விடுகிறார். இது எதிரணியை மிகவும் குழப்பத்தில் வைத்திருக்கிறது.
ஜெய்ஸ்வால் தைரியம் வேற லெவல்
இது குறித்து அலைஸ்டர் குக் கூறும் பொழுது “நாம் இங்கு ஜெய்ஸ்வால் கொண்டாட்டத்தை ஆஸ்திரேலியாவில் தேவையான அளவுக்கு பார்த்து விட்டோம். இருந்தபோதிலும் இது இங்கிலாந்துக்கு எதிரானதை விட மிக சுவாரசியமான ஒன்றாக இருந்தது. ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கை ஸ்லெட்ஜிங் செய்தார். அவர் அப்போது நூறு ரன்கள் எடுத்திருக்கவில்லை. ஆனால் நீங்கள் மெதுவாக வீசுகிறீர்கள் என்று கூறுகிறார். நான் ஸ்டார்க்கை விளையாடி இருக்கிறேன் அவர் மெதுவாக வீச மாட்டார்”
இதையும் படிங்க : இன்னும் 283 ரன்.. சச்சினின் ஆல் டைம் ரெக்கார்டு.. உடைக்க காத்திருக்கும் ஜெய்ஸ்வால்.. 3 டெஸ்ட் ரேஸ்
“அவர் மெதுவாக பந்து வீசினால் என் வாயை மூடிக்கொண்டு நான் அமைதியாக இருப்பேன். அவரை தூண்டி விடாமல் இருப்பேன்.ஆனால் இதைச் செய்ய ஜெய்ஸ்பாலுக்கு 22 வயதில் தைரியம் இருக்கிறது. அவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் முதல் பதினைந்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆக இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் உன்னதமான வீரர்” என்று கூறி இருக்கிறார்.






