56 பந்து.. ரகானே ருத்ரதாண்டவம்.. பாண்டியா பிரதர்ஸ் அணி தோல்வி.. மும்பை பைனலுக்கு தகுதி – SMAT 2024

0
1123
Ajinkya Rahane in SMAT

நடப்பு சையத் முஸ்டாக் அலி டி20 தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பாண்டியா பிரதர்ஸ் விளையாடும் பரோடா அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. இரண்டு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருக்கின்ற காரணத்தினால் இந்த போட்டிக்கு நிறைய எதிர்பார்ப்பு நிலவியது.

- Advertisement -

ஏமாற்றிய பாண்டியா பிரதர்ஸ்

இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய பரோடா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சஷ்வத் ராவத் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.இந்த முறை பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த கேப்டன் குர்னால் பாண்டியா 24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். முக்கியமான கட்டத்தில் வந்த ஹர்திக் பாண்டியா 6 பந்தில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.

கடைசி கட்டத்தில் சிவாலிக் சர்மா ஆட்டம் இழக்காமல் 24 பந்தில் 36 ரன்கள், அஜித் சேத் 14 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். இதனால் பரோடா அணியை ஏழு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் 20 ஓவர்களில் சேர்த்தது. மும்பை அணியின் பந்துவீச்சில் சூரியனாஷ் ஷெட்கே இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

ரகானே தொடர்ந்து அதிரடி

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிருத்திவி ஷா 9 பந்தில் 8 ரன்கள், சூரியகுமார் குமார் யாதவ் 7 பந்தில் 1 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு நடுவில் விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரகானே மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சேர்ந்து 56 பந்தில் அதிரடியாக 88 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் 30 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரகானே சிறப்பாக விளையாடி 56 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 98 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து வெளியேறினார். இந்த தொடரில் இப்போதைக்கு இவரே அதிக ரன்கள் குவித்தவராக இருக்கிறார்.

இதையும் படிங்க : ஸ்மித் லபுசேன் பயிற்சியில் பெரிய தப்பு செய்றாங்க.. அவர்கிட்டயும் இத சொன்னேன் – மைக் ஹ்சி பேட்டி

இதற்கு அடுத்து உள்ளே வந்த சூரியனாஷ் ஷெட்கே சிக்ஸர் அடிக்க மும்பை அணி 17.2 ஓவரில் இலக்கை எட்டி, நான்கு விக்கெட்டுகளை இழந்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடப்பு சையத் முஸ்தாக் அலி தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -