ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் லபுசேன் இருவரும் பயிற்சியில் செய்யும் தவறை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.
தற்போது இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் லபுசேன் அரை சதம் அடித்து மீண்டும் வந்திருக்கிறார். ஆனால் ஸ்மித் பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து கவலை அளிக்கும் விதமாக இருந்து வருகிறது. தற்போது இது குறித்து மைக் ஹசி இருவருக்கும் அறிவுரை கூறியிருக்கிறார்.
கிரிக்கெட் வல்லுனர்கள் மறந்த நிலவரம்
இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்து ஆஸ்திரேலியா சென்ற காரணத்தினால் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் பார்ம் பற்றி கிரிக்கெட் வல்லுனர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். எனவே இது குறித்து பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வந்தார்கள்.
அதே சமயத்தில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பேட்டிங் பார்ம் குறித்து எல்லோரும் மறந்து விட்டார்கள். குறிப்பாக ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்டர்கள் ஸ்மித் மற்றும் லபுசேன் இருவரும் நீண்ட நாட்களாக பேட்டிங் பார்ம் இல்லாமல் இருந்துவந்தார்கள். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அது நன்றாகவே எதிரொலிக்க செய்தது. இதற்குப் பிறகு இவர்கள் இருவரது பேட்டிங் பார்ம் பற்றி கிரிக்கெட் வல்லுனர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இருவரும் பயிற்சியில் செய்யும் தவறுகள்
இது குறித்து பேசி இருக்கும் மைக் ஹஸி கூறும் பொழுது “ஸ்மித் தயாரிப்பை நான் பயிற்சியில் கவனித்தேன். ஸ்மித் மற்றும் லபுசேன் இருவரும் பயிற்சியில் நிறைய பந்துகளை அடித்து கடுமையாக பயிற்சி செய்தார்கள். நான் இது குறித்து ஸ்மித் இடம் பேசிய பொழுது ‘நீங்கள் எவ்வளவு அடித்து விளையாடி கடினமாக பயிற்சி செய்தீர்கள் என்பது மதிப்பு கூறியது. இதுஉண்மையில் உதவுகிறதா? அல்லது கொஞ்சம் தீங்கு விளைவிக்கிறது என்று நினைக்கிறேன்’ என்று கூறினேன்”
இதையும் படிங்க : இந்த தலைமுறை வீரர்கள் நாங்கள் இப்படித்தான்.. அத மட்டும் செஞ்சிட்டா ஆஸிய ஜெயிச்சிடுவோம் – சுப்மன் கில் பேட்டி
“இது சம்பந்தமாக எனக்கு வயதாகும் பொழுது நான் உண்மையை கண்டறிந்தேன். நீங்கள் திரும்பி வருவதற்கு பயிற்சியில் கடினமாகப் பந்தையடித்து விளையாடுவது தரையில் உழைப்பது மிகவும் முக்கியமானது கிடையாது. நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்ச்சியாக போட்டிக்கு வருவதுதான் முக்கியமானது. குறிப்பாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நீங்கள் பயிற்சியில் இவ்வளவு உழைத்தால் இது கடினம் ஆகிவிடும்” என்று கூறி இருக்கிறார்.