முகுல் சவுத்ரி மேஜிக் பண்ணிட்டார்.. மொத்த பாராட்டும் அவருக்குதான்.. இது கடினமான தோல்வி – ரகானே வருத்தம்

0
34
Rahane

நேற்று கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரர் முகுல் சவுத்ரி தனியாக நின்று 27 பந்தில் 54 ரன்கள் எடுத்து தனது அணியை வெல்ல வைத்தார். இது குறித்து எதிர் அணியின் கேப்டன் ரகானே பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் லக்னோ 16 ஓவர்களுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து முக்கிய ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது. எனவே லக்னோ உறுதியாக தோல்வியடையும் என்று நினைத்திருந்த நிலையில்தான் முகுல் சவுத்ரி மேஜிக் நடந்தது.

- Advertisement -

மறக்க முடியாத இன்னிங்ஸ்

இந்த போட்டியில் கடைசி நான்கு ஓவர்களிலும் அதிகமான பந்துகளை முகுல் சௌத்திரி மட்டுமே விளையாடினார். அவர் சந்தித்த ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களை பறக்க விட்டார். இவர் அடித்த மொத்த ஏழு சிக்ஸரில் ஒரு ஹெலிகாப்டர் ஷாட் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் வெற்றி பெறுவதற்காக வெளியில் வீசப்பட்ட ஒரு யார்க்கர் பந்தை முகுல் சவுத்ரி சிக்சர் அடித்த விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரே நாளில் அவர் இந்தியா முழுமைக்கும் தெரிந்த நபராக மாறிவிட்டார்.

- Advertisement -

அவருக்கு என் பாராட்டுகள்

இது குறித்து ரகானே பேசும்போது “இது ஒரு கடினமான தோல்வி. நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் பொழுது எங்கள் வீரர்கள் பெருமைக்குரிய வகையில் விளையாடினார்கள். இதில் முகுல் சவுத்ரி விளையாடிய விதம்தான் மிகவும் முக்கியமானது. அவர் விளையாடிய விதமும் காட்டிய தைரியமும் பாராட்டக்கூடியது”

இதையும் படிங்க : சின்ன ஊர்ல இருந்து வந்த பையன்.. நெட்ஸ்ல செஞ்சத மேட்ச்ல காட்டி புல்லரிக்க வச்சிட்டான் – ரிஷப் பண்ட் பேட்டி

“18 ஓவர்கள் வரையில் போட்டி எங்கள் கைகளில் தான் இருந்தது. நாங்கள் ஆவேஸ் கானை பேட்டிங் முனையில் வைத்திருக்க நினைத்தோம். ஆனால் எங்களால் அது முடியவில்லை. மெதுவான பந்துகள் சிறப்பாக வேலை செய்தது. ஆனால் அந்தப் பந்துகளை முகுல் சவுத்ரி மிகவும் பலமாக அடித்து வெற்றி பெற்றார். அவர் பேட்டிங் செய்த விதம் மிகவும் அருமையாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -