டி20 உலகக்கோப்பை இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா சென்ற இரண்டு இளம் வீரர்கள்! அதில் ஒருவர் சிஎஸ்கே!

0
379

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியுடன் இரண்டு வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களும் சென்று இருக்கின்றனர் என தற்போது தெரியவந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை முடித்த பிறகு, கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை 14 இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பதினாறு பேர் என மொத்தம் 30 பேர் முதற்கட்டமாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளனர்.

- Advertisement -

ரிசர்வ் வரிசையில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சகர், ரவி பிஸ்னாய் ஆகிய மூவரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றனர். அதை முடித்த பிறகு நேரடியாக ஆஸ்திரேலியா செல்கின்றனர். மற்றுமொரு ரிசர்வ் வீரர் முகமது சமி கொரோனா தொற்று காரணமாக வெளியில் இருக்கிறார். அவரும் தற்போது குணமடைந்து விட்டார். இறுதி கெட்ட பரிசோதனை மட்டும் மீதம் இருப்பதால், அதை முடித்த பிறகு ஆஸ்திரேலியா செல்கிறார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களை முடித்த பிறகு, டி20 உலக கோப்பை தொடரில் தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இடதுகை வேகப்பந்துவீச்சிற்கு மிகவும் திணறினர். குறிப்பாக ஷாகின் அப்ரிடி முதல் மூன்று இந்திய வீரர்களான கேஎல் ராகுல், ரோகித், விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி தோல்விக்கு அடிக்கல் நாட்டினார்.

இம்முறை அந்த தவறு நடந்து விடக்கூடாது என்று டி20 உலக கோப்பைக்கு சென்றுள்ள இந்திய அணியுடன் கூடுதலாக இரண்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் பயணிக்கின்றனர். வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக இவர்களை பயன்படுத்திக்கொள்ள அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அபாரமாக பந்துவீசிய இடதுகை வேகப்பந்து பேச்சாளர் முகேஷ் சவுத்ரி, அடுத்ததாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சிறப்பாக செயல்பட்ட இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்கரியா ஆகிய இருவரும் தான் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வருகிறது. பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை சமாளித்து முதல் போட்டியை வெற்றி பெறுவதற்கு இந்திய அணி நிர்வாகம் இப்படியொரு திட்டத்தை வகுத்திருக்கிறது.