பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தோனி எடுத்து மார்க் எவ்வளவு தெரியுமா ?

0
258
MS Dhoni

இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன் யார் என்று கேட்டால் சிறு குழந்தை கூட உடனே உச்சரிக்கும் பெயர் மகேந்திர சிங் தோனி. 2007 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மோசமாக ஆடி வெளியேறிய இந்திய அணியை அதே ஆண்டே தென்னாப்பிரிக்க நாட்டில் வைத்து t20 உலகக்கோப்பையை வெல்ல வைத்த கேப்டன் தோனி. வெறும் டி20 உலகக்கோப்பையோடு நிற்காமல் 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் மேஸ் என்று என்னென்ன கோப்பைகள் இருக்கிறதோ அத்தனையையும் வாங்கிக் கொடுத்து இந்திய அணியை அழகு பார்த்தவர் தோனி.

தோனி களத்தில் மிகவும் வேகமான வீரர். ஓய்வு பெறும் சமயத்தில் கூட பல முன்னணி வீரர்களை மிஞ்சும் உடற்தகுதி அவருக்கு இருந்தது. நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் வீரர்கள் தான் அணிக்கு தேவை என்று பல சீனியர் வீரர்களை ஓரம் கட்டி பல ஆண்டுகளுக்கு முன்பே நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் அணியைக் கட்டமைத்தார் தோனி. தோனியின் எந்த அளவுக்கு உடலை கவனமாக பார்த்துக் கொண்டாரோ அந்த அளவு படிப்பைப் பார்த்துக் கொள்ளவில்லை.

- Advertisement -

இதை 2017ம் ஆண்டு முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் அவர்கள் தொடங்கிய பள்ளி விழா ஒன்றுக்கு சென்ற போது தெரிவித்தார் தோனி. களத்தில் மிகப்பெரிய வீரராக வலம் வந்த தோனி பத்தாம் வகுப்பில் 66 சதவீத மதிப்பெண் தான் பெற்றிருந்தாராம்.பன்னிரெண்டாம் வகுப்பில் 56 சதவீதம் தானாம். அது மட்டுமல்லாது கிரிக்கெட் ஆடுவதற்காக பல முறை வகுப்புகளை கட் அடித்து உள்ளதாகவும் அவரே கூறினார்.

தோனியின் தந்தைக்கு தெரிந்தே தான் வகுப்புகளை புறக்கணிப்பாராம் தோனி. அவரது தந்தையிடம் இருந்தும் பெரிதாக எதிர்ப்பு எல்லாம் வந்தது இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக கல்லூரி போன்ற எதிர்காலத்தை தீர்மானிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பில் தான் நிறைய வகுப்புகளை கட் அடித்து விட்டு, கிரிக்கெட் ஆட செல்வாராம். தோனியின் தந்தையோ இதை பெரிது படுத்தாமல், வருடம் முழுவதும் நன்றாக படித்து இருந்தால் ஒரு நாள் விடுமுறை எடுப்பது பெரிதாக பாதிக்காது என்று இது பற்றி கூறுகிறார். தனது மகனுக்கு எது தேவை என்பதை அறிந்து நல்ல முறையில் தோனியை வளர்த்து இருக்கிறார் அவரது தந்தை.