“அரசனுக்கு கிடைத்த அரியணை” – லாட்ஸ் மைதானத்தின் கிரிக்கெட் கிளப் தோனிக்கு வழங்கிய உச்சபட்ச அங்கீகாரம்! – சின்ன தல சுரேஷ் ரெய்னாவுக்கும் கிடைத்த அங்கீகாரம்!

0
189

மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட சில இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு வாழ்நாள் உறுப்பினர் அங்கீகாரத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

உலகில் முதன்முதலாக 1787ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மேரிலேபோன் கிரிக்கெட் கிளப், பின் 1814ஆம் ஆண்டு முதல் லாட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு அங்கமாக மாறியது. கிரிக்கெட் உலகில் மிக முக்கிய பங்களிப்பை கொடுத்த தலைசிறந்த வீரர்களுக்கு இந்த கிளப்பின் “வாழ்நாள் உறுப்பினர்” அங்கீகாரத்தை வழங்கி கௌரவித்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த கிளப்பில் வாழ்நாள் உறுப்பினர் அங்கீகாரத்தை கடைசியாக பெற்ற இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். அதன்பிறகு இந்த ஆண்டு ஆடவர் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர் வீராங்கனைகள் 5 பேரை தேர்வு செய்து “வாழ்நாள் உறுப்பினர்” அங்கீகாரத்தை வழங்கி கௌரவிக்க உள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.

மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மிதாலி ராஜ், ஜுவலன் கோஸ்வாமி ஆகியோருக்கு இந்தாண்டு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் கொடுப்பது பற்றி பேசிய மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் தலைமை செயல் அதிகாரி கூறுகையில்,

“2011ஆம் ஆண்டு 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்காக உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்த மகேந்திர சிங் தோனி மற்றும் அதே அணியில் மிக முக்கிய பங்காற்றிய யுவராஜ் இருவருக்கும் இந்த அங்கீகாரத்தை கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இருவரும் இணைந்து 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைகளில் இந்தியாவிற்காக வெற்றியை பெற்று தந்திருக்கிறார்கள். அதற்கு அங்கீகாரம் செலுத்தும் விதமாக இதனை செய்கிறோம்.

- Advertisement -

சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் குறிப்பிட்ட கிளப்பிற்கு தொடர்ச்சியாக பல வருடங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் விளையாடி 6000 ரன்கள் அடித்திருக்கிறார். அதற்காகவே அவரை தேர்வு செய்து கௌரவிக்கிறோம்.

மிதாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவராக இருக்கிறார் மற்றும் ஜுவலன் கோஸ்வாமி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இருக்கிறார். இவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதன் மூலம் மேன்மேலும் பல இளம் வீராங்கனைகள் இத்தகைய உயரத்திற்கு வரவேண்டும் என்று இந்த அங்கீகாரத்தை கொடுக்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஐந்து இந்திய கிரிக்கெட்டர்களுடன் சேர்ந்து பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஹபீஸ், நியூசிலாந்து அணியை சேர்ந்த ராஸ் டெய்லர், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த கெவின் பீட்டர்சன் மற்றும் இயான் மார்கன் ஆகியோரும் இந்தாண்டு அங்கீகாரம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.