எம் எஸ் தோனி உலகக் கோப்பை டி20 தொடரில் இந்த வீரரை சேர்த்தே ஆக வேண்டுமென விராட் கோலியை வற்புறுத்துவார் – மைக்கேல் வாகன்

0
232
Vaughan and Dhoni Kohli

இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடர் முடியவுள்ள நிலையில், ஐசிசியின் சர்வதேச உலக கோப்பை டி20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. உலகக் கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நகரங்களில் நடைபெற உள்ளது. தொடரில் பங்கேற்க போகும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ போன மாதம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், அந்தப் பட்டியலில் இடம் பெற்ற வீரர்களின் ஆட்டத்தை அனைவரும் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த வீரர்களில் ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார். நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இதுவரை ஒரு ஓவர் கூட போடவில்லை.

- Advertisement -

பாண்டியாவுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சரியான முடிவாக இருப்பார்

பல்வேறு வல்லுனர்கள், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட ஒரு மாற்றத்தை தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கின்றனர். நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் ரிசர்வ் வீரராக உள்ள தாகூரை பாண்டியாவுக்கும் பதிலாக விளையாட வைக்க வேண்டும் என்பதே அனைவரும் கூறு வரும் அந்த மாற்றமாகும்.

இது சம்பந்தமாக சமீபத்தில் பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், தாகூர் ஒரு அதிரடியான ஆல்ரவுண்டர் வீரராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்
இங்கிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் அவருடைய பேட்டிங் மூலமாக அனைவரையும் அசர வைத்தார். அங்கு பேட்டிங்கில் அசத்திய அவர், நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விக்கெட்டுகளை கைப்பற்றி பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார்.

13 போட்டிகளில் மொத்தமாக 15 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்த பொழுதிலும், அந்த போட்டியில் 4 ஓவர்களில் வீசி 13 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றிய விதம் அற்புதமாக இருந்தது என்று வாகன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

தோனியின் அறிவுரைப்படி தாகூர் இந்திய அணியில் பாண்டியாவுக்கு பதிலாக இடம் பெற வாய்ப்புள்ளது

அற்புதமான ஆல்ரவுண்டர் வீரராக தன்னை ஷர்துல் தாகூர் தற்பொழுது நிலைநாட்டியுள்ளார். என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்படும் இருக்கும் தோனி, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தாகூரை உலக கோப்பை டி20 தொடரில் விளையாட வைப்பார். இது சம்பந்தமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் விராட்கோலியிடம் அவர் விவாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் ஷர்துல் தாகூர் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர் இயான் போத்தம் போன்று விளையாடக் கூடிய வல்லமை படைத்தவர் என்று புகழ்ந்து கூறியுள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அவர் எதிரணி வீரர்களை ஏமாற்றக் கூடிய வித்தையை நன்கு கற்று வைத்திருக்கிறார்.

குறிப்பாக அவருடைய பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை ஏமாற்றி, அவருடைய மாய வலையில் விழ வைப்பதிலும் தாகூர் கைதேர்ந்தவர் என்று மைக்கேல் வாகன் கூறி முடித்தார்.