“எனது கிரிக்கெட் வாழ்க்கையின் லோ பாய்ண்டில் இருந்தபோது எனக்கு ஆறுதலாக இருந்தவர் எம்எஸ்.தோனி” – விராட் கோலியை தொடர்ந்து மனம் திறந்த மற்றொரு இந்திய வீரர்!

0
236

எம்எஸ் தோனி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதல்முறையாக நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி உலகக்கோப்பை வெள்ளை காரணமாக இருந்தவர்

2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் தோனி. அனைத்து வீரர்களையும் அனுசரித்து செல்வதிலிருந்து பதட்டமான சூழ்நிலையிலும் கூலாக இருந்து அணியை வழி நடத்தியதால் கேப்டன் கூல் என ரசிகர்களாலும் கிரிக்கெட் விமர்சகர்களாலும் அழைக்கப்பட்டவர்.

- Advertisement -

இன்று இந்திய அணியின் தூணாக விளங்கும் விராட் கோலி,ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா அஸ்வின் போன்ற வீரர்களை வழி நடத்தி வலுவான இந்திய அணி உருவாக காரணமாக இருந்தவர். எல்லா வீரர்களையும் அரவணைத்துச் செல்லும் தோனி வீரர்களில் சிலர் போட்டிகளின் போது தவறு செய்தால் அவர்களை தட்டிக் கொடுத்து தவறை சுட்டிக்காட்டுபவர். இந்தியா அணியின் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா தோணியுடனான தனது அனுபவம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு இறுதி மூன்று ஓவர்களில் 40 ரண்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இஷாந்த் சர்மா வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என முப்பது ரன்களை விலாசினார் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெர். இதன் காரணமாக வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்து இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் மிகவும் விரக்தியில் இருந்திருக்கிறார் இஷாந்த் சர்மா. மேலும் இந்தப் போட்டியில் தன்னால்தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என நினைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக அழுது இருக்கிறார். அப்போது மகேந்திர சிங் தோனி மற்றும் ஸ்டிக்கர் தவான் ஆகியோர் தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பேசி இருக்கும் இஷாந்த் ஷர்மா” அந்தப் போட்டிக்குப் பிறகு நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன் . இந்திய அணி என்னால்தான் தோற்றது என நினைத்து ஒரு மாதத்திற்கு மேலாக அழுது கொண்டிருந்தேன். எனது மனைவியுடன் அப்போது டேட் செய்து கொண்டிருந்தேன் . தினமும் அவரிடம் தொலைபேசியில் பேசும்போது இதைச் சொல்லி அழுவேன். அந்த நேரத்தில் எம்.எஸ். தோனி மற்றும் தவான் ஆகியோர்தான் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தனர் . எனது அறைக்கு வந்த தோனி “இஷாந்த் நீ சிறப்பாக செயல்படுகிறாய் நடந்ததை நினைத்து கவலைப்படாதே. நீ ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நினைவில் கொள்” என தெரிவித்தார். ஆனால் அந்த ஒரு போட்டி தான் என்னுடைய ஒரு நாள் கிரிக்கெட் கேரியரை முடித்த போட்டி என்று தான் நினைப்பதாக கூறி முடித்தார்.