ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் ரொம்ப மோசமான தொடராக அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை சிஎஸ்கே அணி பிடித்திருந்தது. சிஎஸ்கே அணியில் பேட்டிங் பந்துவீச்சு என பல்வேறு சிக்கல்கள் இருந்தது.
இந்த நிலையில் இது குறித்து தோனி முதல் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார். ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தோனியிடம், சிஎஸ்கே அணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தோனி, “எங்கள் அணியின் பேட்டிங் குறித்து எங்களுக்கு கொஞ்சம் கவலைகள் இருந்தது. தற்போது அதனை நாங்கள் சரி செய்து விட்டோம் என நம்புகிறேன். அடுத்த ஆண்டு ருதுராஜ் அணிக்கு திரும்பி விடுவார். தொடருக்கு நடுவே அவர் காயம் அடைந்து வெளியேறியது எங்களுக்கு பின்னடைவாக மாறியது.”
“அவர் வந்தபின் முழு பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். எங்கள் அணியில் சில ஓட்டைகள் இருந்தது.அதனை நாங்கள் சரி செய்ய முயற்சி செய்கின்றோம். வரும் டிசம்பர் மாதம் மினி ஏலம் வருகிறது. அதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ, அதை நாங்கள் சரி செய்ய முயற்சி செய்வோம்.”
“கடந்த இரண்டு ஆண்டுகள் எங்களுக்கு நல்ல ஒரு சீசன் ஆக அமையவில்லை. ஆனால் தவறிலிருந்து நாங்கள் பாடம் கற்று வருகின்றோம். கடந்த சீசனில் என்ன தவறு செய்தோம் என்பது குறித்து நாங்கள் கேள்விகளை எங்களுக்குள்ளே எழுப்பி வருகின்றோம். என் கண் பார்வை குறித்து சோதனை செய்ததில் என்னால் இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.”
இதையும் படிங்க: இன்னைக்கு ஒரு வரலாறு நடக்கப் போகுது.. நாங்க சும்மா இந்திய அணிய தோற்கடிப்போம்.. காரணம் இதான் – ஜோஸ் டாங் நம்பிக்கை
“ஆனால் என்னுடைய கண் பார்வை மட்டும்தான் கிரிக்கெட் விளையாட சரியாக தற்போது இருக்கின்றது. வெறும் கண்களை வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாட முடியாது. கிரிக்கெட் போட்டிகளில் விளையாட நாம் சிறந்த உடல் தகுதியில் இருக்க வேண்டும். கடந்த 15 ,16 ஆண்டுகளில் களத்தில் நான் என்ன செய்தேன் என்பது முக்கியமல்ல. அடுத்த ஆண்டு நான் எப்படி விளையாடுகிறேன். என்னால் உடல் தகுதியை எட்ட முடிகிறதா என்பதை பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் நாம் செய்த விஷயத்திற்காக யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள்” என்று தோனி கூறியுள்ளார்.