இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெல்லும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் டாங் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இந்த போட்டியில் நான்காவது நாளான இன்று இங்கிலாந்து அணியின் கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு 324 ரன்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த போட்டி இப்போது வரையில் யார் பக்கம்? என்பது முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வினோதமான ஆடுகளம்
தற்போது போட்டி நடைபெற்று வரும் லண்டன் ஓவல் மைதானம் முதல் மூன்று நாட்களுக்கு பேட்டிங் செய்வதற்கு கடினமாகவும், கடைசி இரண்டு நாட்கள் பேட்டிங் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். பொதுவாகவே கடைசி இரண்டு நாட்கள் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருக்கும். ஆனால் இங்கு வித்தியாசமாக இருப்பது வினோதமாக பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் பார்க்கும் பொழுது இந்திய அணிக்கு இந்த புள்ளி விபரம் கொஞ்சம் பின்னடைவை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் இந்திய அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பதும் மற்றும் ஒரு பின்னடைவை கொடுக்கிறது. ஆனாலும் இந்திய வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஜோஸ் டாங் நம்பிக்கை
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் ஜோஸ் டாங் கைப்பற்றினார். கடந்த இரண்டு போட்டிகளாக நீக்கப்பட்டு கடைசி போட்டியில் வாய்ப்பு பெற்ற அவரது பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.
இதையும் படிங்க : ஆகாஷ் தீப் பேட்டிங்ல சாதாரண ஆள் இல்ல.. அவர் இந்த மாதிரி பேட்ஸ்மேன்தான் – அஸ்வின் பாராட்டு
இந்த போட்டி குறிப்பு ஜோஸ் டாங் பேசும்பொழுது “நாளை கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும். எங்களால் ரன்கள் எடுக்க முடிந்தால் அது எங்களுக்கு சிறந்ததாக இருக்கும். எங்களுடைய பேட்டிங் வரிசை நம்ப முடியாத அளவுக்கு பலமாக இருக்கிறது. நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தால் எங்களால் வெற்றி பெற முடியும். நாளை பேட்டிங்கில் நான் பங்களிக்க வேண்டிய சூழ்நிலை வராது என்று நினைக்கிறேன். அப்படி வந்தால் நான் முழுதாக பங்களிப்பை கொடுப்பேன்” என்று கூறியிருக்கிறார்.






