2 வருடம் கழித்து அரை சதம் – 40 வயதில் ராகுல் டிராவிட் & சச்சினின் சாதனையை முறியடித்துள்ள தோனி

0
170
Ms Dhoni fifty vs KKR 2022

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் பொழுது ஆரவாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்துள்ளது.

சென்னை அணியில் அதிகபட்சமாக மகேந்திர சிங் தோனி 38 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 50 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

- Advertisement -
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அரைசதம் குவித்த மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி கடந்த இரண்டு வருடங்களில் அவ்வளவு சிறப்பாக பேட்டிங் விளையாடவில்லை.2020ஆம் ஆண்டு 200 ரன்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டு 114 ரன்கள் என மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் 314 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார்.30 போட்டிகளில் 314 எடுத்த தோனி ஒரு அரைசதம் கூட குவிக்கவில்லை.

இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து, தோனி எப்போது அரை சதம் அடிப்பார் என்ற அனைவரின் கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

- Advertisement -
சாதனை படைத்துள்ள மகேந்திர சிங் தோனி

இன்று அரைசதம் குவித்த மகேந்திர சிங் தோனி ஒரு சாதனையையும் பதிவு செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் அரைசதம் குவித்த வயதான இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் முதலிடத்தில் இருந்தார். 2013ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக ராகுல் டிராவிட் அரைசதம் குவித்திருந்தார். அப்பொழுது அவருக்கு வயது 40 வருடம் மற்றும் 116 நாட்களாக இருந்தது.

இன்று மகேந்திர சிங் தோனி கொல்கத்தா அணிக்கு எதிராக அரசு குவித்த வேளையில் மகேந்திர சிங் தோனியின் வயது 40 வருடம் மற்றும் 262 நாட்கள் ஆகும். இதன் மூலம் ராகுல் டிராவிடை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு மகேந்திர சிங் தோனி முன்னேறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்த வயதான வீரர்கள் பட்டியல் :

1.மகேந்திர சிங் தோனி (40 வருடம் 262 நாட்கள்) – கொல்கத்தா அணிக்கு எதிராக (2022*)

  1. ராகுல் டிராவிட் (40 வருடம் 116 நாட்கள்) – டெல்லி அணிக்கு எதிராக (2013)

3.சச்சின் டெண்டுல்கர் (39 வருடம் 362 நாட்கள்) – டெல்லி அணிக்கு எதிராக (2013)

- Advertisement -