டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா சேர்கப்படாததற்கான காரணத்தை வெளியிட்டார் தோனி

0
217
Suresh Raina and MS Dhoni

லீக் தொடரின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ஒரு மிகப்பெரிய அட்வான்டேஜ் காத்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில், முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் மோதிக் கொள்ளும். இதில் தோல்வி அடைந்த அணி தொடரிலிருந்து வெளியேறாமல் இரண்டாம் குவாலிஃபையர் ஆட்டத்திற்கு தகுதி பெறும். எனவே லீக் தொடரின் முடிவில் புள்ளிப்பட்டியலில் எப்படியாவது முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்கிற ஆசை அனைத்து அணிகளுக்கும் இருக்கும்.

அந்த முதல் இரண்டு இடத்திற்கான போட்டியில் சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் உள்ளன. தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடிக் கொண்டு இருக்கின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

முதல் இன்னிங்சில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்

முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ருத்துராஜ் 13 ரன்களிலும், டுப்லஸ்ஸிஸ் 10 ரன்களிலும், உத்தப்பா 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த மொயின் அலியும் 5 ரன்களில் ஆட்டமிழந்து விட, அம்பத்தி ராயுடு இறுதிவரை நின்று 43 பந்துகளில் 55 ரன்கள் குவித்து சென்னை அணியை தாங்கிப் பிடித்தார். அவருடன் இணைந்து மகேந்திர சிங் தோனி 18 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா இடம் பெறாதது ஏன்

இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா இன்றைய போட்டியில் விளையாடி வருகிறார். அதற்கான காரணத்தை மகேந்திர சிங் தோனி விளக்கிக் கூறியுள்ளார்.

- Advertisement -

சுரேஷ் ரெய்னாவுக்கு முதுகு பகுதியில் சிறிய காயம் உள்ள காரணத்தினால் இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா இன்றைய போட்டியில் களம் இறங்கியுள்ளார். அதேபோல சாம் கரனுக்கு பதிலாக டுவைன் பிராவோவும் சென்ற போட்டியில் விளையாடிய ஆசிஃபுக்கு பதிலாக தீபக் சஹரும் இன்று விளையாடுவதாக மகேந்திர சிங் தோனி கூறினார்.

மேலும் பேசிய அவர் அணியில் உள்ள வீரர்கள் அனைவருக்கும் சிறு ஓய்வு கொடுக்கும் எண்ணத்திலும் உள்ளதாக கூறினார். காயமடைந்த வீரர்களுக்கு முறையான ஓய்வு தேவை என்றும், அதேசமயம் பிளே ஆஃப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது அணிக்கு நல்லது என்றும் கூறினார்.

புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் லீக் தொடரை முடித்துக் கொண்டால், பிளே ஆஃப் சுற்றில் இரண்டு வாய்ப்புகளுடன் சற்று பயமின்றி நிதானமாக விளையாடலாம் என்றும் மகேந்திர சிங் தோனி கூறி முடித்தார்.