சாதா சிவமா இருந்த நான், சிக்ஸர் சிவமா மாறியது எப்படி? களத்தில் இறங்கும் முன் தோனி என்ன சொல்லி உள்ளே அனுப்புகிறார்? – சிவம் துபே விளக்கம்!

0
1811

சிஎஸ்கே அணியில் அப்படி என்ன நம்பிக்கை கொடுத்தார்கள்? மேலும் களத்தில் இறங்கும்முன் தோனி என்ன சொல்லி அனுப்புகிறார்? என்று தனது பேட்டியில் கூறினார் சிவம் துபே.

இந்த வருட ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சிவம் துபேவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. குறிப்பாக எதிரணியின் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்குவதில் கைதேர்ந்தவராகவே மாறிவிட்டார். 10 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 315 ரன்கள் குவித்த சிவம் துபே, இதுவரை 27 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முந்தைய சீசன்களில் ஆர்சிபி, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்கு விளையாடி வந்த சிவம் துபே இந்த அளவிற்கு செயல்பட்டதில்லை. சிஎஸ்கே அணிக்கு வந்தபின், எப்படி இவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது? மேலும் யாருடைய அறிவுரையில் இத்தகைய செயல்பாடுகள் வெளிப்படுகிறது? என்று தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் சிவம் துபே.

“சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு எனக்கு இதுதான் ரோல் என்று கொடுக்கப்பட்டது. அந்த குறிப்பிட்ட ரோலுக்காக எனது முழு கவனத்தையும் செலுத்தி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன். இதனால் எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் என்னால் விளையாட முடிகிறது. கிடைக்கிற வாய்ப்புகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது.

போட்டிக்கு முன்னர் தோனியிடம் நான் உரையாடல் நடத்துவேன். அப்போது எனக்கு அதிக நம்பிக்கை மற்றும் உத்வேகம் கிடைக்கும். எம்எஸ் தோனி ஆளுமைமிக்க ஒருவர். அவர் உங்களிடம் பேசும்பொழுது, நம்பிக்கை வானுயர அளவிற்கு கிடைக்கும். மேலும் எனக்கு இந்த ரோல் மட்டுமே என்பதால் இறங்கி வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் முதல் பந்தில் இருந்து அடிப்பதை மட்டுமே திட்டமாக வைத்திருக்கிறேன்.” என்றார்.

- Advertisement -