இந்திய அணியுடைய ரெட்ரோ ஜெர்சியில் கேப்டன் கூல் – இணையத்தை கலக்கும் தோனியின் புகைப்படம்

0
877
Dhoni New Look

இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியில் முன்னால் கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனியின் புகைப்படம் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் ஓய்வு பெற்றார். டி20 உலகக்கோபையில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த போது கொரோனா காரணமாக உலகக்கோப்பை அடுத்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது .இது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது . தற்போது தோனி ஐ.பி.எல் மட்டும் விளையாடி வருகிறார்.

ஒவ்வொரு சர்வதேச அணிகளும் தங்களது ஜெர்சிகளை ரெட்ரோ வடிவிலான ஜெர்சியாக மாற்றிவருகிறார்கள் . இந்த ஜெர்சியில் தோனி விளையாடி இருந்தால் எப்படி இருக்கும் ? இந்த ஜெர்சியில் தோனி எப்படி இருப்பார் ? என ரசிகர்கள் ஏங்கிகொண்டிருந்த நிலையில் தற்போது தோனியின் ரெட்ரோ ஜெர்சிபுகைப்படம் சமூக வலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

இதனை தோனியின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது எம்.எஸ்.தோனியுடைய இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சி புகைப்படம் அனைவரருக்கும் ஓர் ஆச்சர்யத்தை
ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

தோனி மீண்டும் இந்திய அணிக்காக விளையாட போகிறாரா ? டி20 உலக்கோப்பையில் இந்தியாவிற்காக விளையாட போகிறார ? என்று ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்த பின்னர் அப்ரிடி , கிரிஸ் கெய்ல் போன்ற வீரர்கள் ஓய்வை ரத்து செய்து அணிக்காக மீண்டும் விளையாடி வருகின்றர்கள் . அது போல தோனியும் விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது .

அந்த புகைப்படம் விளம்பரத்திற்க்கு எடுக்கப்பட்டவை . சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்க்காகன விளம்பர படத்தில் இந்திய அணியுடைய ரெட்ரோ ஜெர்சியில் மஹேந்திர சிங் தோனி நடித்துள்ளார் . இதன் புகைப்படம் வலைத்தளங்களில் வைராகியுள்ளது .இந்த விளம்பரத்தை இயக்கிய பராக் கான் கூறுகையில் “ இன்று ஒரு விளம்பரத்திற்காக எம்.எஸ்.தோனியை இயக்கினேன். அவர் அற்புதமான நபர் . என்னுடன் இருந்தவர்கள் தோனியுடன் போட்டோ எடுக்க கேட்க சிரித்தமுகத்துடன் அனைவரிடமும் ஒத்துழைத்தார். தற்போது நானும் தோனியின் ரசிகை “ என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படங்கள் வைராலாகியுள்ளது