இந்திய கிரிக்கெட்

இந்திய அணி மிகவும் ஆபத்தானது.. ஆனாலும் அந்த ஒரு விஷயத்தை நினைச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு – எம்எஸ் தோனி பேட்டி

டி20 உலக கோப்பை இந்த மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் இதற்காக மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி கோப்பையை வெல்லும் அணிகளில் முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டன் ஆன மகேந்திர சிங் தோனி, தற்போதைய டி20 இந்திய அணி குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி மகேந்திர சிங் தோனியின் தலைமையில் விளையாடிய போது பொற்காலம் என்று தான் குறிப்பிட வேண்டும். 2007ஆம் ஆண்டு முதன் முதலாக எம்எஸ் தோனி தலைமையில் இந்திய அணி t20 உலக கோப்பையை வென்றது. அதற்குப் பின்னர் 2011ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்றும் தோனியின் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போதைய இந்திய அணி குறித்து எம்.எஸ். தோனி சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து எம்.எஸ். தோனி கூறும் போது “தற்போதைய இந்திய அணி மிகவும் ஆபத்தான அணிகளில் ஒன்றாகும்( புன்னகையுடன் கூறுகிறார் ). அவர்களுக்கு இந்த வடிவத்தில் பெரிய அனுபவம் உள்ளது. மேலும் அவர்களுக்கு அழுத்தத்தின் கீழ் விளையாடுவதிலும் அனுபவம் இருக்கிறது. இதில் எனக்கு குறிப்பாக கவலை அடையக்கூடிய விஷயம் என்றால் போட்டியின் போது உண்டாகும் பனி தான் நான் கவலை படக்கூடிய விஷயமாகும்.

எனக்கு உண்மையிலேயே பனி பிடிக்காது. பனிப்பொழிவு பல விஷயங்களை மாற்றுகிறது. நான் விளையாடும் போது கூட பனிப்பொழிவு என்னை பயமுறுத்த கூடிய விஷயமாக இருந்தது. இதனால் போட்டியின் போது டாஸ் என்பது மிக முக்கிய காரணியாகும்” என்று எம் எஸ் தோனி குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by