“இதனால தான்யா தோனி இன்னும் உச்சத்தில் இருக்காரு”.. அவர் நினைத்தால் இன்னும் சில வருடங்கள் இந்தியாவிற்கும் ஆடியிருக்கலாம் – பாக்., ஜாம்பவான் வாசிம் அக்ரம் கருத்து!

0
3786

“தோனி நினைத்திருந்தால் இந்திய அணியில் இன்னும் சில வருடங்கள் ஆடியிருக்க முடியும். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக்கூடியவர் அவர். அதனால்தான் உச்சத்தில் இருக்கிறார்.” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம்.

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவரான மகேந்திர சிங் தோனி, கடைசியாக 2019ஆம் ஆண்டு 50-ஓவர் உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார். பின்னர் சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சரியாக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

- Advertisement -

அதன் பிறகும் தொடர்ந்து மூன்று சீசன்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த பிறகும் இரண்டு முறை ஐபிஎல் கோப்பைகளையும் வென்று தந்திருக்கிறார். இன்னும் தனது கேப்டன்ஷிப், கீப்பிங் இரண்டிலும் அசாத்தியமான ஃபார்மில் இருந்து வரும் தோனி பேட்டிங்கிலும் நன்றாக விளையாடி வந்தார். இந்த சீசனில் காலில் அடிபட்டு இருப்பதால பேட்டிங் கடைசியாக இறங்கினார்.

காலில் காயத்துடன் கடைசி வரை விளையாடி அணியை கோப்பையை வெல்லும் அளவிற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். ஐபிஎல் முடிந்த கையோடு அடுத்த நாளே மும்பைக்கு சென்ற தோனி காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இன்னும் இரண்டு மாதங்களில் சரியாகி விட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான பயிற்சிகளிலும் ஈடுபடுவார் என்று தகவல்கள் வருகிறது.

தோனி நினைத்திருந்தால் இந்திய அணிக்கு இன்னும் சில வருடங்கள் விளையாடியிருக்க முடியும். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக்கூடியவர். அதனால் தான் அவர் தோனி என்று வானுயர புகழ்ந்திருக்கிறார் வாசிம் அக்ரம்.

- Advertisement -

“இந்த சீசனில் தோனிக்கு காலில் அடிபட்டு இருந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் கடைசியில் இறங்கி நன்றாக ஃபினிஷிங் ரோலில் விளையாடினார். கேப்டன் ஆகவும் கீப்பிங்கிலும் அசத்தினார். உடல் அளவில் அவர் ஃபிட் இல்லை என்று கூறவே முடியாது. இன்னும் அவரது ஆட்டத்தில் முனைப்பு அதிகமாக இருக்கிறது. கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்டிருப்பதால் தான் அவரால் இவ்வளவு தூரம் செயல்பட முடிகிறது.

அவர் நினைத்திருந்தால் இந்திய அணிக்கு இன்னும் சில வருடங்கள் விளையாடியிருக்கலாம். ஆனால் எந்த இடத்தில் ஓய்வு பெற வேண்டும் என்பதை புரிந்து தனது ஓய்வை அறிவித்திருப்பது தெளிவாக தெரிகிறது. இளம் வீரர்கள் இவரது இடத்திற்கு வந்து இந்திய அணிக்குள் செட் ஆவதற்கு போதிய நேரமும் இருந்தது. இவர் இல்லாததை குறையாக காணாத அளவிற்கு தோனியின் முடிவுகள் அமைந்தது. தெளிவான சிந்தனை கொண்ட தோனி அடுத்த வருடம் இன்னும் உடல் தகுதி உடன் வந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று நம்புகிறேன்.” என கருத்து தெரிவித்திருக்கிறார் தோனி.