தோனிக்கு அப்புறம் நான் தான் கேப்டனாக வரணும்னு முடிவு பண்ணதே தோனி தான்; இப்போ வரைக்கும் நான் ஏன் தோனிக்கு விசுவாசமா இருக்கேன்னா? – விராட் கோலி பேட்டி!

0
1970

ஆர்சிபி அணிக்கு அளித்த ஆடியோ பேட்டியில் தோனி பற்றியும், தோனிக்கு பிறகு நான் எப்படி கேப்டனாக நியமிக்கப்பட்டேன் என்பது பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார் விராட் கோலி.

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

வழக்கமாக, அணியின் தேர்வுக்குழுவினர் மற்றும் பிசிசிஐ கலந்த ஆலோசித்து இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். ஆனால் விராட் கோலி விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. தேர்வுக்குழுவினருக்கு விராட் கோலியின் பெயரை தோனி தான் பரிந்துரை செய்திருக்கிறார்.

அதன்பிறகு அணியில் இருந்துகொண்டு சில வருடங்கள் விராட் கோலிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார் தோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி விலகியபிறகு பிசிசிஐ தரப்பிலிருந்தும், தேர்வுக்குழுவினர் தரப்பிலிருந்தும் விராட் கோலிக்கு நிறைய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும்படியும் கூறியுள்ளனர். அவர் மோசமான பார்மில் இருந்ததால், அதையும் காரணமாக காட்டியுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஆர் சி பி அணிக்கு ஆடியோ வாயிலாக அளித்த பேட்டியில் நிறைய விஷயங்களை விராட் கோலி பகிர்ந்து கொண்டார். அதில் தோனியை பற்றியும் பேசினார், நான் தோனிக்கு வலது கையாக செயல்பட்டேன் என்றும் விராட் கோலி கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் பேசியதாவது:

“தோனிக்கு பிறகு, நான் தான் இந்திய அணிக்கு கேப்டனாக வரவேண்டும் என்று முடிவு செய்தது தோனி தான். வேறு எவரும் அதை செய்யவில்லை. நான் அவருக்கு கடைசி வரை வலது கையாக செயல்பட்டேன்.

நான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு என்னிடம் தொலைபேசி மூலம் அழைத்து பேசிய ஒரே ஒருவர் தோனி மட்டுமே. இப்போது வரை நான் அவருக்கு விசுவாசமாக இருப்பதற்கு காரணம் இதுவும் தான்.

2018 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்று கவுன்டி போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. எனக்கு வருத்தமாகவும் இருந்தது. அப்போது தோனி மற்றும் டி வில்லியர்ஸ் இருவரும் எனக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்தனர். குறிப்பாக டி வில்லியர்ஸ், நீ 2014 ஆம் ஆண்டு இருந்ததைப் போல இப்போது இல்லை. நீ உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் தான் இங்கிலாந்தில் உன்னால் நன்றாக விளையாட முடியும் என்கிற அவசியம் இப்போது இல்லை. நிச்சயம் நன்றாக விளையாடுவாய் என்று நம்பிக்கை கொடுத்தார்.”

இவர்கள் என் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் புரிந்துகொள்கிறேன். தோனிக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.” என்று பேசினார்.