நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் கேரளாவை சேர்ந்த விக்னேஷ் புத்தூர் சிறப்பாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். போட்டி முடிந்ததும் தோனி அவரிடம் சிரித்தபடி ஏதோ விசாரித்து விட்டு சென்றார். தற்போது அவர் என்ன விசாரித்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த தகவலை விக்னேஷ் புத்தூர் நண்பரான ஸ்ரீராக் என்பவர் அவருக்கு அலைபேசியில் அழைத்து கேட்டு தெரிந்து இருக்கிறார். தற்போது இதை அவர் மீடியாக்களிடம் கூறியிருக்கிறார். மேலும் தோனி மிக முக்கியமான அறிவுரை ஒன்றை அவருக்கு கூறி இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் கண்டுபிடிப்பு
விக்னேஷ் புத்தூர் இதுவரையில் கேரள மாநில அணிக்காக விளையாடியது கிடையாது. அவரை ஒரு டி20 லீக்கில் பார்த்த மும்பை இந்தியன்ஸ் திறன் கண்டறியும் குழு உடனடியாக உள்ளே கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து அவரை தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியில் கொண்டு இணைத்தது.
இதற்கு அடுத்து அவர் தொடர்ந்து பயிற்சிகளை செய்ய வைத்தது. மேலும் ஏலத்தின் போது 30 லட்சம் ரூபாய்க்கு அவரை வாங்கியது. இத்துடன் முதல் போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பும் கொடுத்தது. சிறப்பாக செயல்பட்ட விக்னேஷ் புத்தூர் சிஎஸ்கே அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் போட்டி முடிந்ததும் தோனி அவரிடம் ஏதோ பேசிவிட்டு சென்றார்.
தோனி என்ன கூறினார்?
இதுகுறித்து அவருடைய நண்பர் ஸ்ரீராக் பேசும் பொழுது ” நான் அவரை அழைத்து தோனி உன்னிடம் என்ன சொன்னார் என்று கேட்டேன். அதற்கு அவர் தோனி தன்னிடம் வயது என்னவென்று கேட்டதாகவும், இதற்கு அடுத்து ஐபிஎல் தொடருக்கு உன்னை எது அழைத்து வந்ததோ அதை விட்டு விடாமல் தொடர்ந்து செய் என்றும் அறிவுரை கூறியதாகவும் தெரிவித்தார்”
இதையும் படிங்க : எல்எஸ்ஜி தோல்விக்கு காரணம் கேப்டன் ரிஷப் பண்ட்?.. கோச் லான்ஸ் குளுஸ்னர் மாறுபட்ட பதில்
“மேலும் கிரிக்கெட் எவ்வளவு சீக்கிரத்தில் பணத்தைக் கொடுக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். வினோத் காம்ப்ளி மற்றும் பிரிதிவிஷா ஆகியோருக்கு என்ன நடந்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்கிறோம். அவன் மூன்று விக்கட்டுகள் கைப்பற்றி உடனடியாக பிரபலம் ஆனதை பார்த்து அவருடைய பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் அவன் எதையும் சரியாக எடுத்து செயல்பட கூடியவன்” என்று கூறியிருக்கிறார்.






