எல்எஸ்ஜி தோல்விக்கு காரணம் கேப்டன் ரிஷப் பண்ட்?.. கோச் லான்ஸ் குளுஸ்னர் மாறுபட்ட பதில்

0
599
Rishabh

நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் அசுதோஷ் சர்மா அதிரடியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி திரில் வெற்றி பெற்றது. தங்கள் அணியின் தோல்விக்கான காரணம் குறித்தது லக்னோ அணியின் பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் பேசியிருக்கிறார்.

இந்தப் போட்டியில் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. லக்னோ மணிக்கு டாப் ஆர்டர்கள் சிறந்த முறையில் விளையாட அந்த அணிக்கு 209 ரன்கள் கிடைத்தது. ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியது, அந்த அணி மேற்கொண்டு 20 முதல் 30 ரன்கள் சேர்த்து எடுப்பதை தடுத்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் கேப்டன்சி சொதப்பல்

இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் மூன்று ஓவர்கள் மீதமிருந்த பொழுது, சீனியர் பவுலர்களான சர்துல் தாக்கூர் மற்றும் ரவி பிஷ்னாய் இருவருக்கும் மூன்று ஓவர்கள் எஞ்சி இருந்தன. இந்த நேரத்தில் அவர்களை வைத்து மீதம் ஓவர்களை முடித்து வெற்றிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான நிலையில் ரிஷப் பண்ட் அறிமுக பவுலருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து ரன்களை வாரி வழங்கினார். கடைசி கட்டத்தில் இதை பயன்படுத்திக் கொண்ட அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெல்ல வேண்டிய இடத்தில் இருந்த லக்னோ அணி பரிதாபமான முறையில் தோல்வி அடைந்தது. மேலும் இந்த ஆடுகளத்தில் தாங்கள் சரியான ரன்களை எடுத்ததாக கேப்டன் ரிஷப் பண்ட் கூறியிருந்தார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் தோல்விக்கு காரணமா?

இது குறித்து பேசி இருக்கும் பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் கூறும்பொழுது ” நான் இது பற்றி கூற வேண்டும் என்றால் இன்னும் 20 முதல் 30 ரன்கள் சேர்த்து எடுத்து இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் நாங்கள் பந்து வீசும் பொழுது அழுத்தத்திற்கு உள்ளானோம். டெல்லி கடைசியாக சிறப்பாக பேட்டிங்கில் பினிஷிங் செய்தது. ஆனால் நாங்கள் தேவையான ரன்கள் எடுக்காததுதான் எங்களுடைய தோல்விக்கு காரணம்”

இதையும் படிங்க: நிச்சயமா தோத்துருவோம்னு நினைச்சேன்.. ஆனா பலருக்கு புடிக்காத அதுதான் எங்கள காப்பாத்துச்சு – டூ பிளஸ்சிஸ்

“எங்கள் பிளேயிங் லெவன் இருந்த விதத்தில் பேட்டிங் செய்வதை விட பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். இந்த போட்டியில் சில ரன்களை அனுபவம் இல்லாத பௌலிங் யூனிட்டால் கொடுத்திருக்கிறோம். இதற்கு அடுத்து இன்னும் இரண்டு மூன்று நாட்களில் போட்டியிருக்கிறது. எனவே நாங்கள் இதிலிருந்து பாசிட்டிவை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -