ஆஸ்திரேலியா அணி தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.
இந்நிலையில் நேற்று தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் வைத்து நான்காவது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலியா அணியை அதிர்ச்சி அடையச் செய்தது.
அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்றிச் கிளாஸ்ன் அதிரடியாக ருத்ர தாண்டவம் ஆடி 83 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும் 13 சிக்ஸர்களும் அடங்கும். இவருக்கு உறுதுணையாக ஆடிய டேவிட் மில்லர் 45 பந்துகளில் 82 ரன்கள் விலாசினார். இதில் ஆறு பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். மேலும் நேற்றைய போட்டியில் பல சாதனைகளும் முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
கடைசி பத்து ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா நிகழ்த்தி இருக்கிறது. நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கடைசி பத்து ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் சாதனையை தென்னாப்பிரிக்கா முறியடித்து இருக்கிறது. இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக கடைசி 10 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது சாதனையாக இருந்தது. அதனை தன் ஆப்பிரிக்கா தற்போது முறியடித்திருக்கிறது . மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 400 ரன்கள் கடந்த அணி என்ற சாதனையும் தற்போது தென்னாப்பிரிக்க அணியின் வசமே உள்ளது. நேற்றைய போட்டியில் 416 ரன்கள் குவித்ததன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி ஏழாவது முறையாக நான் ஒரு ரன்களுக்கு மேல் கடந்து சாதனை படைத்திருக்கிறது.
தென்னாப்பிரிக்கா அணியின் ஹென்ரிச் கிளாஸன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட் இருக்கு 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்தனர். குறிப்பாக கடைசி 9 ஓவர்களில் இவர்கள் இருவரும் இணைந்து 164 ரன்கள் எடுத்தனர். இதில் 14 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளரான ஆடம் ஜாம்பா மிக மோசமான சாதனை ஒன்றை செய்திருக்கிறார். இந்த சாதனையின் மூலம் அவர் தனது ஆஸ்திரேலிய நாட்டைச் சார்ந்த வீரரான மிக் லிவிஸ் என்பவரின் 17 ஆண்டு சாதனையை தற்போது சமன் செய்து இருக்கிறார்.
கடந்த 26 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு போட்டியாக அமைந்தது. இந்தப் போட்டியில் தான் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 400 ரன்கள் எடுக்கப்பட்டது. மேலும் இதே போட்டியில் தான் உலக ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் நான் ஒரு ரன்களுக்கு அதிகமான இலக்கை சேஸ் செய்த சாதனையும் இடம்பெற்றது.
17 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 434 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. ஆனால் இந்த சாதனையை மூன்றே மணி நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி முறியடித்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் லிவிஸ் 10 ஓவர்கள் வீசி 113 ரன்கள் விட்டுக் கொடுத்தார் . ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இதுதான் மிகவும் மோசமான பந்துவீச்சாக இருந்து வந்தது. இந்த மோசமான சாதனையை நேற்று ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஆடம் ஜாம்பா சமன் செய்திருக்கிறார். நேற்றைய போட்டியில் ஜாம்பா 10 ஓவர்கள் பந்து வீசி 113 ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த அவர் கடந்த நான்கு வருடங்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஐசிசி யின் ஒரு நாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்காவது ரேங்கில் ஆடம் ஜாம்பா இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று .
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மோசமான பந்து வீச்சு:
0-113 – மிக் லூயிஸ் ஆஸ்திரேலியா (எ) தென் ஆப்பிரிக்கா , 2006
0-113 – ஆடம் ஜம்பா ஆஸ்திரேலியா (எ) தென்னாப்பிரிக்கா 2023
0-110 – வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் (எ) இங்கிலாந்து 2016
0-110 – ரஷித் கான் ஆப்கானிஸ்தான் (எ) இங்கிலாந்து 2019
0-108 – பிலிப் போயிஸ்வெயின் நெதர்லாந்து (எ) இங்கிலாந்து , 2022
0-106 – நுவன் பிரதீப் இலங்கை (எ) இந்தியா, 2017
1-106 – புவனேஷ்வர் குமார் இந்தியா (எ) தென்னாப்பிரிக்கா, 2015