ஆபரேஷன் பண்ணீட்டு வந்து இப்படி பவுலிங் போட ஒரு தைரியம் வேணும், மோசின் கானுக்கு ஸ்கை தான் லிமிட்! – க்ருனால் பாண்டியா பாராட்டு!

0
394

ஆப்ரேஷன் செய்துவிட்டு வந்து இப்படி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. மோசின் கான் அதீத தைரியம் கொண்டவர் என்று வானுயரே புகழ்ந்துள்ளார் க்ருனால் பாண்டியா.

ஐபிஎல் சீசனின் கடைசிகட்ட லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 35 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

ஸ்டாய்னிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 89(47) ரன்கள் விளாசினார். க்ருனால் பாண்டியா பக்கபலமாக விளையாடி 49(42) ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்கள் குவித்தது லக்னோ அணி.

மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்து வலுவான துவக்கம் அமைத்தனர். ரோகித் சர்மா 37 ரன்கள், இஷான் கிஷன் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மும்பை அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் குறைந்த ஸ்கொருக்கு அவுட்டாகினர்.

டிம் டேவிட், கேமரூன் கிரீன் இருவரும் களத்தில் இருந்தபோது, கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த ஓவரில் அபாரமாக பந்து வீசிய மோசின் கான் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததால், ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தொடரின் முக்கியமான கட்டத்தில் பலம்மிக்க மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தேவையான வெற்றியைப் பெற்ற லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா போட்டி முடிந்த பிறகு பேட்டி அளிக்கையில்,

“எனக்கு காலில் கிராம்ப் வந்துவிட்டது. இதனால் தசைப்பிடிப்பும் ஏற்பட்டது. ஆகையால் அவ்வப்போது உள்ளே சென்று சிகிச்சை செய்து வந்தேன் தொடர்ச்சியாக ஓய்வெடுக்க எனக்கு மனம் வரவில்லை. நான் அணிக்கான பிளேயர் என்று நினைப்பவன்.அந்த வகையில் காலில் காயம் இருந்தாலும் பொறுத்துக் கொண்டு விளையாடி விடலாம் என்று நினைத்தேன்

மோசின் கான் மிகப்பெரிய தைரியமும் மனவலிமையும் கொண்டவர். ஐபிஎல் தொடருக்கு முன்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுவிட்டு இப்படி விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. அவரது திடமான மனநிலைக்கு வானம் தான் எல்லை. அந்த அளவிற்கு மன உறுதி கொண்டிருக்கிறார்.

இன்றைய போட்டி எங்களுக்கு எளிதாக அமையவில்லை. ஆனால் கடைசியில் வெற்றி பெற்ற அணியாக இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. லக்னோ மைதானத்தில் நடக்கும் கடைசியில் போட்டியில் ரசிகர்களுக்க்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.