இந்திய கிரிக்கெட்

வருண் சக்கரவர்த்தி இதை செய்யவே கூடாது.. அவர் தனி ஆள் கிடையாதுனு புரிஞ்சுக்கணும் – மோர்கல் பேட்டி

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் எதிரணி பேட்ஸ்மேன் குறித்து வருண் சக்கரவர்த்தி நிறைய வீடியோ அலசல்களை செய்கிறார் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் அணியின் தாக்குதல் பந்துவீச்சாளராக இருக்கும் வருண் சக்கரவர்த்தி எப்படி செயல்பட வேண்டும்? அவரிடம் தாங்கள் என்ன பேசி இருக்கிறோம் என்பது குறித்தும் மிக விரிவாகவே பேட்டி அளித்திருக்கிறார்.

கூட்டு முயற்சி அவசியம்

இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி இருக்கிறார். மிடில் ஓவர்களில் அவர் உண்டாக்கும் தாக்கம் இந்திய அணி போட்டியை வெல்ல முக்கியமானதாக அமைகிறது.

இதுகுறித்து மோர்னே மோர்கல் கூறும்பொழுது “வருண் எங்கள் அணியின் ஸ்ட்ரைக் பவுலராக இருக்கிறார். அதே சமயத்தில் அவரைச் சுற்றி நான்கு பவுலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அழுத்தத்தை எதிரணிக்கு உருவாக்குவார்கள். அவர் அதை பயன்படுத்தி விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அவர் எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை தான்தான் உடைக்க வேண்டும் என கூடுதல் முயற்சிகள் செய்கிறார். ஆனால் நாங்கள் அவரிடம் அவசரப்படாமல் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம்”

- Advertisement -

அவர் நல்ல மாணவர்

“அவர் சரியான இடங்களில் பந்தை இறக்கினாலே விஷயம் தானாக நடைபெற ஆரம்பித்து விடும். மேலும் அவரைச் சுற்றி நாங்கள் ஒரு பந்துவீச்சு குழுவை சிறப்பாக உருவாக்கி இருக்கிறோம். அவர் விளையாட்டை கற்றுக் கொள்ளும் நல்ல மாணவர். எதிரணி பேட்ஸ்மேன்கள் குறித்து நிறைய வீடியோ அலசல்கள் செய்கிறார். எதிரணிகள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்கிறார்”

இதையும் படிங்க : இப்பவும் சொல்றேன்.. நாங்க வெளியே போயிருந்தாலும் உலகக்கோப்பை ஜெயிக்கிற டீம்தான் – மிட்சல் மார்ஷ் பேச்சு

“நாங்கள் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக எங்களது பந்துவீச்சு திட்டங்களை எப்படி அமைத்துக் கொள்ளப் போகிறோம் என்பது குறித்து விவாதிப்போம். எல்லா இடங்களிலும் எப்படி விழிப்புணர்வுடன் இருந்து விக்கெட்டுகள் கைப்பற்றுவது என்பது குறித்து நாங்கள் உழைத்து வருகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts