நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை விட்டு ஆஸ்திரேலியா அணி வெளியே இருந்தாலும் சிறந்த அணியாகவே இருப்பதாக கேப்டன் மிட்சல் மார்ஸ் கூறியிருக்கிறார்.
நேற்று ஆஸ்திரேலியா அணி தங்கள் கடைசி போட்டியில் ஓமான் அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஸ் சில முக்கிய விஷயங்கள் குறித்து மனம் திறந்து கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் சரிவு
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் வந்தாலும் நம்பிக்கை கொடுக்கும் அளவில் திறமையான வீரர்கள் யாரும் கிடைக்காமல் இருப்பது அவர்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. உதாரணமாக சிவம் துபே ஒரு மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக, பிளேயிங் லெவலில் எப்போதும் இருக்கும் வீரராக உயர்ந்திருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் நிறைய பேர் இப்படி இருந்தாலும் தொடர்ந்து விளையாடும் அளவுக்கு இல்லை.
இந்த சிக்கலுடன் மூத்த வீரர்களின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக முதல் சுற்றில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு எதிராக தோல்வி அடைந்து இரண்டாவது சுற்று முன்னேற முடியாமல் ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது.
நாங்கள் நல்ல அணிதான்
மேலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நட்சத்திர வீரர் ஸ்மித் அணிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த சோகத்துடனே அவருடைய சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கிறது.
இதையும் படிங்க: இந்திய அணியின் அந்த விஷயத்தை அம்பலப்படுத்தி ஜெயிப்போம்.. 1,30,000 பேர் முன்னிலையில் நடக்கும் – தெ.ஆ பயிற்சியாளர் சவால்
இதுகுறித்து மிட்சல் மார்ஸ் பேசும்பொழுது “கொழும்பு மைதானத்தின் ஆடுகளம் மெதுவாக இருந்தது. ஆனால் நாங்கள் இதற்கு தயாராகவே இருந்தோம். இப்போது கூட இங்கு வேலையை சிறப்பாக முடிக்க கூடிய அணி எங்களிடம் இருந்தது என்று நான் நம்புகிறேன். ஆனால் போட்டி கிரிக்கெட்டில், நீங்கள் சிறிதளவு தவறு செய்தால் கூட அது உங்களுக்கு போட்டியை இழக்க வைக்கும் அளவுக்கு பின்னடைவை கொடுத்து விடும். கடந்த இரண்டு வாரங்களில் எங்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் இருந்தது. ஆனால் நாங்கள் அதை சரியாக செயல்படுத்த முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.






