இந்திய அணியில் சிவம் துபைவை பவுலராக உருவாக்கியது எப்படி என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறியிருக்கிறார்.
தற்போது சிவம் துபே 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கிறார். இது இந்திய டி20 அணிக்கு மிகப்பெரிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அவர்கள் விரும்பும் வகையில் பிளேயிங் லெவனை உருவாக்க முடிகிறது.
இதுகுறித்து மோர்னே மோர்கல் பேசும் பொழுது “இந்த பயணம் சிவம் துபே உடன் எனக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக தொடங்கியது. நாங்கள் அவருக்கு ஆசிய கோப்பையில் துபாயில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசுவதற்கு கொடுத்தோம். உங்களை பயிற்சியாளர் மற்றும் அணி மொத்தமும் நம்புகிறது என்று தெரிந்துவிட்டால் போதும். உங்களை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் இல்லாமல் போய்விடும்”
“அவருக்கு பந்துவீச்சில் பல்வேறு திறமைகளும் வேரியேஷன்களும் இருக்கின்றன. அவருக்கு தேவைப்பட்டதெல்லாம் நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டு எந்த சூழ்நிலையில் எப்படியான வேரியேஷன்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வதுதான்”
“அவர் ஒரு பவர் ஹிட்டராக இருப்பதால் எந்த பகுதியில் பந்து வீசலாம் என்கின்ற புரிதல் அவருக்கு அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் பேட்ஸ்மேன் எந்த பகுதியில் அடிப்பது கடினம் என்று அவருக்கு தெரியும். மேலும் சில நேரங்களில் அவருக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்காமல் அவர் வெளியேறும் போது வருத்தத்துடன் செல்வதை பார்த்திருக்கிறேன். அவருடைய அந்த ஆர்வம்தான் எல்லாவற்றுக்கும் காரணம்”
இதையும் படிங்க : சிவம் துபே கிட்ட அதை நீங்க கவனிச்சீங்களா?.. அவர் ஆல்ரவுண்டர் ஆயிட்டார் – அபிஷேக் நாயர் பேச்சு
” அவருடைய விளையாட்டில் கடுமையாக உழைத்து ஒரு ஆல் ரவுண்டராக உருவாகியதற்கான பாராட்டு அவருக்குதான் சேர வேண்டும். பந்து ஸ்கிட் ஆகி ஸ்பின்னர்கள் வீச கஷ்டப்படும் பொழுது, அந்த இடத்தில் இரண்டு ஓவர்களை வீசுவதற்கு சிவம் துபே மிகவும் சரியானவர்” என்று கூறி இருக்கிறார்.