சிவம் துபே கிட்ட அதை நீங்க கவனிச்சீங்களா?.. அவர் ஆல்ரவுண்டர் ஆயிட்டார் – அபிஷேக் நாயர் பேச்சு

0
4
Shivam

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே செய்த ஒரு விஷயத்தால் அவர் ஆல்ரவுண்டராக உண்மையில் மாறிவிட்டார் என அபிஷேக் நாயர் தெரிவித்திருக்கிறார்.

இந்த போட்டியில் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும் சிவம் துபே கைப்பற்றினார். மேலும் அவரே இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அன்-சங் ஹீரோ

இந்திய டி20 அணியில் மிக முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரராக சிவம் துபே தொடர்ந்து இருந்து வருகிறார். அணி சிக்கலில் இருந்த பல போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தாக்கத்தை உருவாக்கி வெற்றிக்கு வெளியில் தெரியாத பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

மிகக்குறிப்பாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, நடப்பு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டி என அவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. மேலும் அவர் இப்பொழுது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை மிகவும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அவர் ஆல் ரவுண்டர் ஆகிவிட்டார்

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த அபிஷேக் நாயர் தற்பொழுது சிவம் துபே குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு உண்மையிலேயே ஆல் ரவுண்டராக மாறிவிட்டார் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : இவங்க 2 பேர் இருக்கும்போது இந்தியாவை அசைக்க முடியாது.. ரொம்ப அரிதான ஆளுங்க.. தெ.ஆ தோற்கும் – ரிக்கி பாண்டிங் கருத்து

இது குறித்து அவர் கூறும் போது “சிவம் துபே பந்து வீச்சு வேகம் அதிகரித்து உள்ளது. அவர் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறார். இதுதான் ஒரு ஆல் ரவுண்டரின் சரியான வேகம். அதே சமயத்தில் நெதர்லாந்து அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது வேகப்பந்துவீச்சாளர்களே இவ்வளவு வேகத்தில்தான் வீசினார்கள். சூர்யா மற்றும் கம்பீர் இருவரும் தனக்கு என்ன சவால்களை கொடுத்த போதும் அதை சிவம் துபே சிறப்பாக எதிர் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -