இந்திய கிரிக்கெட்

நான் எடுத்த கடினமான முடிவு.. சஞ்சுவை இதனால் தான் அணியில் இருந்து தூக்கினேன் – கம்பீர் விளக்கம்

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மீண்டும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அவரை இங்கிலாந்து தொடரின்போது அணியிலிருந்து நீக்கியது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் சஞ்சு 57 மற்றும் 50 ரன்கள் என இரண்டு அரைசதங்கள் அடித்து தனது இடத்தை மீண்டும் வலுப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டிக்குப் பிறகு சஞ்சு அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்பு பெற்றார். ஆனால் தொடர்ந்து 14, 13, 15 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கடைசி போட்டியில் மீண்டும் சஞ்சுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது சஞ்சு நல்ல நிலையில் இருப்பதால், அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த கம்பீரின் கருத்து கவனம் பெற்றுள்ளது.

“சஞ்சுவை நீக்கியது எனது பயிற்சியாளர் காலத்தில் நான் எடுத்த முடிவுகளில் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அதற்கு முன்பு அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனால் சில நேரங்களில் வீரர்களின் தற்போதைய பார்மையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும்,” என்று கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும், சில போட்டிகளில் வீரர்கள் தோல்வியடைந்துவிட்டதால் அவர்கள் மோசமான வீரர்களாக மாறிவிட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -
- Advertisement -
Published by