அவர் 50 ரன்கள் அடித்தாலும் யாரும் பாராட்ட மாட்டார்கள் ; விராட் கோலி எப்போது ஃபார்முக்கு வருவார் – மொஹமத் அசாருதின் கணிப்பு

0
131
Mohammad Azharuddin about Virat Kohli

இந்திய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்து சாதாரணப் பின்புலத்தில் இருந்து வந்து ஆதிக்கம் கேப்டன்களாக செலுத்திய வீரர்கள் இருவர். ஒருவர் சமீபத்திய ஜார்கன்ட்டின் மகேந்திர சிங் தோனி, மற்றொருவர் ஹைதராபாத்தின் முகம்மத் அசாரூதின்.

ஒரு பேட்ஸ்மேனாக யாரும் எட்ட முடியாத உயரங்களைத் தொட்ட மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினால் கேப்டன்சியில் எதுவும் செய்ய முடியவில்லை. கேப்டன்சி பிரசர் அவரது பேட்டிங்கை பாதித்தது. இதனால் கேப்டனாக முகம்மத் அசாரூதினின் ஆதிக்கம் நீண்ட காலம் இந்திய கிரிக்கெட்டில் நீடித்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் ரன் மெசின் விராட்கோலியின் பேட்டில் இருந்து சதங்கள் வரவில்லை. அவர் அரைசதங்கள் அடித்தாலும் அது அவரின் பேட்டிங் தரத்துக்குக் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அந்தளவிற்குக் கடந்த காலங்களில் சதங்களாக கொட்டியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விராட்கோலியின் பேட்டிங் மேலும் மோசமடைந்தது. முதல் பந்தில் டக் ஆகும் கோல்டன் டக்கில் மட்டுமே மூன்று ஆட்டமிழந்தார். மொத்தம் 16 போட்டிகளில் ஆடிய அவர் 341 ரன்களை 22.73 சராசரியில் அடித்திருந்தாலும், முதல் பத்து ஆட்டங்களில் அவரது சராசரி இருபதுக்கும் கீழ் போய் 150+ ரன்களை மட்டுமே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட்கோலியின் இந்த பேட்டிங் பார்ம் சரிவு குறித்தும், அவர் எப்போது மீண்டும் சிறப்பான பேட்டிங் பார்ம்க்கு திரும்புவார் என்றும் முகமது அசாருதீனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “விராட்கோலி ஐம்பது ரன் எடுத்தாலே அது அவரின் பேட்டிங் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. அவர் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிவில்லை என்பது உண்மைதான். சிறந்தவர்கள் எல்லோரும் அவர்கள் வாழ்வின் கடினமான காலங்களை ஒருமுறையாவது கடந்தே செல்கிறார்கள். இப்போது அவருக்கு ஒரு சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அவர் இங்கிலாந்து தொடரில் மீண்டும் பார்ம்க்கு திரும்புவார் என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் டெக்னிக்கில் பிரச்சினை இல்லை. அவருக்கு அதிர்ஷ்டம்தான் இல்லை” என்று கூறியிருக்கிறார்.