ரோகித் சர்மா டி20 உலக கோப்பை டீம்ல இருந்தேன்.. இப்ப கம்பீர் டீம்ல இல்ல – மனம் திறந்த முகமது சிராஜ்

0
50
Siraj

இந்த ஆண்டு அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்திய அணியில் தான் இடம் பெறாதது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தற்போது முகமது சிராஜ் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம் பெற்ற அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உலகக் கோப்பையை வென்றவர்

ரோகித் சர்மா தலைமையில் 2024 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. இந்த உலகக் கோப்பையை வென்ற அணியில் முகமது சிராஜ் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவருக்கு அந்த தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது அவருடைய இடத்திற்கு இளம் வீரர் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடியவர் என்பதால் இந்த வாய்ப்பு அவருக்கு சென்று இருக்கிறது. ஒருவேளை ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தால் கூட அவர் எட்டாவது இடத்தில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என்னுடைய வாழ்த்துக்கள்

இது குறித்து பேசி உள்ள முகமது சிராஜ் கூறும்பொழுது “நான் கடைசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடினேன். தற்போது எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வீரருக்கும் உலகக் கோப்பையில் விளையாடுவது கனவாக இருக்கும். அதே சமயத்தில் தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அணி சிறப்பானதாக இருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”

இதையும் படிங்க : இந்திய நிர்வாகமே தயவு செஞ்சு இவர் வேலை என்னன்னு சொல்லுங்க.. கேப்டனே ரொம்ப குழம்புறாரு – முகமது கைப்

“நான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்தேன். பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான் விளையாடவில்லை. அவர்களுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நான் 40 ஓவர்கள் பந்து வீசி இருந்தேன். எனவே எனக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு தேவைப்பட்டது. இதற்காக ஓய்வு கேட்க முடியாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சீராக தொடர்ந்து விளையாடி வரும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு அவசியமானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -