இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி தற்போது தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் பிளேயிங் லெவன் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கை சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. இத்தனைக்கும் ஆடுகளம் மெதுவாக காணப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணி இதன் சூழ்நிலையை அறிந்து மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஆனால் சொந்த தாய் மண்ணில் நிலமையை அறியாத இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கி போட்டியை தோற்றது.
அதுமட்டுமல்லாமல் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஆள்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி கடந்த போட்டியில் ஏழாவது இடத்தில் களம் இறங்கினார். மேலும் பவுலிங் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசி 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த சூழ்நிலையில் அவரது இடம் குறித்து முகமது கை சில கேள்விகளை இந்திய அணி நிர்வாகத்திற்கு எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இரண்டாவது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி எனக்கு புரியவில்லை . நீங்கள் நான்கு வேதப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினார்கள். ஆடுகளம் மெதுவாக காணப்பட்டது. இதனை நன்கு அறிந்த நியூசிலாந்து அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களோடு விளையாடியது. வெளியில் இருந்து வரும் அணி நிலைமையை சரியாக புரிந்து கொண்டது. சுழற் பந்துவீச்சு அவர்களின் பலம் இல்லை என்றாலும் ஆடுகளத்தின் சூழ்நிலையை அறிந்து அப்படி மேற்கொண்டது.
இந்தியாவின் பிளேயிங் லெவன் எனக்கு புரியவில்லை. நித்திஷ் குமார் ரெட்டியின் வேலை என்ன என்று எனக்கு சொல்லுங்கள். பயிற்சியாளர் மற்றும் நிர்வாகமே அவரது வேலை என்ன என்று சொல்லுங்கள். அவர் வெறும் பேட்ஸ்மேன் தான் ஆல்ரவுண்டர் கிடையாது இந்திய அணி இதை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறதோ அவ்வளவு நன்மை இருக்கும். அவர் விளையாடும் போதெல்லாம் கேப்டன் சௌகர்கயமாக இருப்பதில்லை” என்று பேசி இருக்கிறார்.






