தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று தான் விக்கெட் கைப்பற்றுவதற்கு பும்ரா சொன்ன ஒரு அறிவுரை முக்கிய காரணமாக இருந்ததாக முகமது சிராஜ் தெரிவித்திருக்கிறார்.
இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
வேகத்தில் அசத்திய இந்திய அணி
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நான்கு முக்கிய சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள். அதே சமயத்தில் பும்ரா மற்றும் சிராஜ் என இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தார்கள். இதில் பும்ரா எடுத்ததுமே இரண்டு விக்கெட் கைப்பற்றி நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதே சமயத்தில் தனது மூன்றாவது ஸ்பெல் வரையில் முகமது சிராஜ் விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் பந்துவீச்சில் நிறைய ரன்கள் கொடுத்து வந்தார். இந்த நிலையில் நாளின் முடிவில் பும்ரா ஐந்து விக்கெட் கைப்பற்ற முக்ம்மது சிராஜ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ் 2 மற்றும் அக்சர் படேல் ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்னில் சுருண்டது. இந்திய அணி 37 ரன்னுக்கு ஒரு விக்கெட் இழந்து இருக்கிறது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பும்ரா சொன்ன அறிவுரை
இதுகுறித்து முகமது சிராஜ் பேசும்பொழுது ” இன்று ஆட்டத்தின் துவக்கத்தில் பந்து புதியதாக இருக்கும் பொழுது பேட்ஸ்மேன்களுக்கு விளையாட சுலபமாக வந்தது. அதே சமயத்தில் பந்து தேய்ந்த பிறகு பவுன்ஸ் கொஞ்சம் குறைவாக மாறியது. இதன் காரணமாக நான் தொடர்ந்து ஸ்டெம்ப் டு ஸ்டெம்ப் ப்ந்து வீசினேன். இது எனக்கு நல்ல தாக்கத்தை கொடுத்தது. தொடர்ந்து அப்படி வீசுவதால் எனக்கு விக்கெட் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகமானது”
இதையும் படிங்க: 5/27.. வாசிம் அக்ரமின் வரலாற்று சாதனை.. தூள் தூளாக்கிய பும்ரா.. ஆசியாவில் இருந்து புதிய ரெக்கார்டு
“பும்ரா பாய் என்னிடம் தொடர்ந்து ஸ்டெம்பை நோக்கி வீசும் படி கூறினார். இப்படி செய்வதால் போல்ட், எல்பிடபிள்யு மற்றும் லென்த் சரியாக இருந்தால் கேட்ச் வாய்ப்பும் கிடைக்கும். நான் அவர் சொன்னபடியே தொடர்ந்து செய்தேன். அதே சமயத்தில் ஒரு முனையில் பந்து சீராகவும் இன்னொரு முனையில் இருந்து வீசும் பொழுது பவுன்ஸ் ஏற்றத்தாழ்வாகவும் இருக்கிறது. தற்போது நாங்கள் 37 ரன்னுக்கு ஒரு விக்கெட் இழந்து இருக்கிறோம். இந்த வகையில் பார்த்தால் இந்த போட்டியில் நாங்களே முன்னிலையில் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.






