5/27.. வாசிம் அக்ரமின் வரலாற்று சாதனை.. தூள் தூளாக்கிய பும்ரா.. ஆசியாவில் இருந்து புதிய ரெக்கார்டு

0
58
Bumrah

இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா ஐந்து விக்கெட் கைப்பற்றி வாசிம் அக்ரமின் வரலாற்று சாதனையை முறியடித்திருக்கிறார்.

இந்திய அணி சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இன்று லீடர் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறது.

- Advertisement -

எல்லா நேரத்திலும் தாக்கம்

இந்த போட்டியின் முதல் செசனில் பந்துவீச்சாளர்களுக்கு கண்டிஷன் மற்றும் ஆடுகளத்தில் பெரிய உதவி இல்லை. இந்த நிலையில் தொடர்ந்து ஆறாவது ஓவரை வீசிய பும்ரா ரியான் ரிக்கல்ட்டன் விக்கெட்டை கைப்பற்றினார். இதற்கு அடுத்து தொடர்ந்த ஏழாவது ஓவரில் எய்டன் மார்க்ரம் விக்கட்டை கைப்பற்றி சிறந்த துவக்கத்தை உருவாக்கினார்.

இதைத்தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த பும்ரா டோனி டி சோர்சி விக்கெட்டை கைப்பற்றினார். இதற்கு அடுத்து மீண்டும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு வந்த பும்ரா ஹார்மர் மற்றும் கேசவ் மகாராஜ் விக்கெட்டை கைப்பற்றி தென் ஆப்பிரிக்க இன்னிங்சை 159 ரன்னில் முடித்தார். இந்த போட்டியில் 15 ஓவர்கள் பந்து வீசி 5 மெய்டன்களுடன் 27 ரன்கள் விட்டு தந்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

பும்ரா வரலாற்று சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சேனா நாடுகளுக்கு எதிராக அதிக முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய ஆசிய வேகப்பந்துவீச்சாளராக வாசிம் அக்ரம் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றியதின் மூலமாக பூம்ரா இந்த சாதனையை முறியடித்திருக்கிறார். மேலும் ஒட்டுமொத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் அதிக முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் இருக்கிறார்.

டெஸ்ட் வடிவத்தில் SENA அணிகளுக்கு எதிராக அதிக 5 விக்கெட் (ஆசிய வேகப்பந்து வீச்சாளர்களால்)

13 முறை – ஜஸ்பிரித் பும்ரா
12 முறை – வாசிம் அக்ரம்
11 முறை – கபில் தேவ்
9 முறை – வக்கார் யூனிஸ்
8 முறை – இம்ரான் கான்
8 முறை – ஜாகீர் கான்
8 முறை – சோயிப் அக்தர்

இதையும் படிங்க : கேப்டன் கில் எனக்காக இதை மட்டும் செய்.. நான் நிச்சயம் அத பண்ணி தரேன்.. சிராஜ் செய்த சம்பவம்

WTC இல் பெரும்பாலான 5 விக்கெட்

13 முறை – ஜஸ்பிரித் பும்ரா (76 இன்னிங்ஸ்)
11 முறை – ரவி அஸ்வின் (78 இன்ங்ஸ்)
10 முறை – பாட் கம்மின்ஸ் (95 இன்ங்ஸ்)
10 முறை – நாதன் லியோன் (95 இன்ங்ஸ்

- Advertisement -