நேற்று நடைபெற்ற 19 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் குஜராத் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் தனது பந்துவீச்சு குறித்து சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.
முகமது சிராஜ் சிறப்பான பவுலிங்
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவாக வெளியேற, மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆன நிதிஷ்குமார் ரெட்டி அதிகபட்சமாக 33 ரன்கள் குவித்தார். இறுதியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 9 பந்துகளில் அதிரடியாக விளையாடி 22 ரன்கள் குவித்தார்.
இதில் குஜராத் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் 4 ஓவர்கள் முடிவில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி 16 ஓவர்களிலேயே 153 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்தும் தனது பவுலிங் குறித்தும் சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.
என்னால் ஜீரணிக்க முடியல
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” உங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்த ஒரு அம்சமாகும். இந்த கூட்டத்தில் என் குடும்பத்தினரும் இருந்தார்கள். அது என்னை வெகுவாகவே உயர்த்தியது. நான் ஏழு வருடங்களாக ஆர்சிபி அணியில் இருந்து உள்ளேன். என் பந்துவீச்சு மற்றும் மனநிலை குறித்து நான் கடுமையாக உழைத்து உள்ளேன். அது எனக்கு நன்றாக வேலை செய்கிறது. ஒரு காலத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நான் தேர்வு செய்யப்படாததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் என்னை நானே உற்சாகப்படுத்தி என் தவறுகளை சரி செய்து மீண்டும் மகிழ்ச்சியாக விளையாட்டில் ஈடுபட தொடங்கினேன்.
இதையும் படிங்க:நாங்கள் நினைத்த எதுவுமே நடக்கல.. குறிப்பா எங்கள் தோல்வி அந்த இடத்தில்தான் நடந்தது – பேட் கம்மின்ஸ் பேட்டி
ஒரு தொழில் முறை வீரராக நீங்கள் இந்திய அணியோடு தொடர்ந்து விளையாடும்போது உங்கள் மனதில் சந்தேகம் எழுகிறது. ஆனால் என்னை நானே சரி செய்து கொண்டு என் தவறுகளை சரி செய்து மீண்டும் உற்சாகத்தோடு விளையாடினேன். நீங்கள் சிறப்பாக விளையாட முயற்சிக்கும்போது உங்களது மனநிலை உச்சத்தில் இருக்கும். நீங்கள் பந்தை உள்ளேயும், வெளியேயும் நகர்த்தும்போது அது உங்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை தருகிறது” என்று முகமது சிராஜ் பேசி இருக்கிறார்






