நாங்கள் நினைத்த எதுவுமே நடக்கல.. குறிப்பா எங்கள் தோல்வி அந்த இடத்தில்தான் நடந்தது – பேட் கம்மின்ஸ் பேட்டி

0
454

நடப்பு ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாடின. இதில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் அணியின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் பேட்ரிக் கம்மின்ஸ் சில முக்கிய கருத்துக்கள் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் 4வது தோல்வி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களை விரைவாக முகமது சிராஜ் வெளியேற்ற, அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் நிதிஷ்குமார் ரெட்டி 31 ரன்கள் குவித்தார். மேலும் ஆடுகளம் மெதுவாக காணப்பட்டதால் இதனை குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். பந்து வீச்சுத் தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் விரைவாக ஆட்டமிழந்தாலும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் கில் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் குவித்து வெளியேற, சுப்மான் கில் 61 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரூதர் போர்ட் 16 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தோல்வி குறித்து பேட் கம்மின்ஸ்

எனவே தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறும் போது “ஐதராபாத் ஆடுகளம் இன்று விளையாடுவதற்கு எங்களுக்கு கடினமானதாக இருந்தது. ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால் நாங்கள் போட்டியில் நிச்சயமாக இருந்திருக்க முடியும். மேலும் இந்த ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக அமையவில்லை. பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம், அதுவும் எங்களுக்கு நடைபெறாமல் போனது.

இதையும் படிங்க:16.4 ஓவரில்153 ரன் சேசிங்.. சன்ரைசர்ஸ் பவுலிங்கை வெளுத்த ரூதர் போர்டு.. வாஷிங்டன் சுந்தர் ஸ்பெஷல் கேமியோ.. ஜிடி ஹாட்ரிக் வெற்றி

இருப்பினும் குஜராத் அணி வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். அவர்களின் வேகப்பந்துவீச்சை விளையாடுவதற்கு மிகவும் கடினமானதாக இருந்தது” என்று கூறியிருக்கிறார். இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இனி வரும் பெரும்பாலான போட்டிகளை சன்ரைசர்ஸ் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -